Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளைக் சுட்டிக்காட்டி இரணுவ ஆட்சிச் சூழலை நீடிக்கும் இலங்கை

அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 82 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இதுவரையில் முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை என பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இயங்கி வருவதாகவும், பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்திற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் எழக்கூடிய எதிர்ப்பு, முன்னைநாள் இராணுவத்தினர் மத்தியிலிருந்து உருவாகக் கூடிய எதிர்ப்பு தமிழ்ப் பிரதேசங்களில் அடக்கு முறைக்கு எதிரான போரட்டங்கள் குறித்த பயம் ஆகியன இலங்கையை இராணுவ ஆட்சிச் சூழலில் வைத்திருப்தையே இந்திய அரசு விரும்புகிறது.

Exit mobile version