முன்னை நாள் போராளிகளிலிருந்து சமூகப்பற்றும் போராட்ட உணர்வும் கொண்ட பலரை தமது உளவாளிகள் ஊடாக உள்வாங்கி அழிக்கும் முயற்சியில் இந்திய இலங்கை அரசுகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் பரவலாக ஏற்பட்டுள்ளது.
கோபி உள்ளிட்ட மூன்று தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் கொல்லப்பட்டதன் ஊடாக வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் நிலையாயமானது என்பது நிரூபணமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மகிந்த அரசின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க, கண்டி அஸ்கிரி மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், நெடுங்கேணி சம்பவம் இதற்கான பதிலை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்ட உணர்வுள்ள போராளிகளை உள்வாங்கி அவர்களை அழிக்கும் திட்டத்தை இலங்கை அரச பயங்கரவாதிகள் நடைமுறைப்படுத்தும் அதே வேளை அவர்களின் நடவடிக்கைகளை புலிகளின் மீட்சி எனக் கூறி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வளர்க்கிறது,