புலிகளின் உளவுத் துறைப் பொறுப்பாளரும், பிரபாகரனுக்கு அடுத்த தலைவராகக் கருதப்பட்டவருமான சண்முகலிங்கம் சிவஷங்கர் அல்லது பொட்டு அம்மான் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பதவி நீக்கம் செய்யப்படுள்ளார் என இலங்கை ஆங்கில நாளிதழ் டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரனின் பிரத்தியோகப் பாதுகாவலர் வான் மற்றும் ராதா படையணிகளின் பொறுப்பதிகாரி ருத்னம் மாஸ்டர் புலனாய்வுப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
. இராணுவத் தளபதி சரத் பொன்சேக மற்றும் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலைசெயும் திட்டங்களை நிறைவேற்றத் தவறிவமையே இப்பதவி நீக்கத்திற்குக் காரணம் என தெரிவிக்கும் நாளிதழ் புலிகளில் ஏற்பட்ட கருணா பிளவிற்க்கு ஒப்பானது இது எனக் குறிப்பிட்டுள்ளது.
இன்டர்போல், இந்திய பொலிஸார் மற்றும் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினால் தேடப்பட்டு வரும் முக்கிய விடுதலைப் புலிகள் தலைவர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.