Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளுடன் பேச்சுகளில் ஈடுபடுவது வீண்முயற்சி!:கோத்தபாய ராஜபக்ஷ

16.08.2008.
இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வுகாணும் விடயத்தில் தனக்குள்ள நேர்மையை, சர்வதேச சமூகத்திற்குப் புரிய வைப்பதில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதி யின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புலிகளுடன் பேச்சுகளில் ஈடுபடுவது வீண்முயற்சி என்பதால் இலங்கை அரசு புலிகளுடன் ஒருபோதும் பேச்சுகளில் ஈடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோ சகர் எம்.கே.நாராயணன் “த ஸ்ரெயிட் ரைம்ஸ்’ பத்திரிகைக்கு இலங்கை குறித்து வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக இந்தோ ஆசிய செய்திச் சேவைக்குத் தொலைபேசி மூலம் தாம் வழங்கிய பேட்டியிலேயே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
“”இலங்கை அரசுப் படைகள் புலிகளுக்கு எதிரான மோதல்களில் வெற்றி பெறலாம். எனினும் ஈழத் தமிழர்கள், இலங்கை அர சின் பக்கத்தில் இல்லாதமையால் அரசி னால் யுத்தத்தில் வெற்றிபெற முடியாது” என்றும்
“”தமிழ்மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பல்வேறு விடயங்களைத் தீர் மானிப்பதற்கான உரிமை அவர்களுக்கு உள் ளது என்ற உணர்வை அவர்கள் மத்தி யில் இலங்கை அரசு ஏற்படுத்தாத வரை இலங்கையில் வெற்றிபெற முடியாது” என்றும்
மேற்படி பேட்டியில் நாராயணன் கூறி யிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எமக்குள்ள நேர்மையை வெளி யுலகிற்கு வெளிப்படுத்தி அவர்களைத் திருப்தியடையச் செய்யும் ஒரு விடயத் தில் நாம் தோல்வி கண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
செயற்பாடுகள் மூலம் நாங்கள் இதனை நிரூபித்து விட்டோம். துரதிஷ்டவசமாக பிரசார விடயத்தில் நாங்கள் சிறந்த நிலையில் இல்லை. தமிழ்மக்கள் எம்முடன் இல்லையென்றால் அது எமது பலவீனமே என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாராயணன் எதிர்மறையாக எதனையும் தெரிவிக்கவில்லை. பயங்கரவாத்தைத் தோற்கடிக்க வேண்டும். எனினும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையே காணவேண்டும் என எமது ஜனாதிபதி தெரிவிப்பதையே நாராயணன் வேறு விதத்தில் தெரிவித்திருக்கிறார் எனத் தாம் கருதுகின்றார் என்றும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
நாராயணன் இலங்கைக்கு எதிராக எதனையும் தெரிவிக்கவில்லை.
இராணுவம் வெற்றி பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளமை முக்கியமானது. இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இவை மிகவும் சாதகமான விடயங்கள் என்றும் கோட்டாபய குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது அரசினாலும் ஜனாதிபதியினாலும் வெளி உலகிற்கு தமது நேர்மையை வெளிப்படுத்த முடியாதமையையே நாராயணனின் கருத்து வெளிப்படுத்துகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர் இதில் முன்னேற்றம் காணவேண்டும் எனவும் இதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
நாராயணனைத் தான் நன்கு புரிந்து கொண்டுள்ளார் எனவும் அவரது தொலைநோக்கு தமக்கு தெரியுமெனவும் கோட்டாபய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியுள்ள அரசு தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்கையும் கைப்பற்ற முனைகின்றது. அரசு ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு மேற்கொள்ளாது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கான சகல முன்னைய பேச்சுகளும் பிரச்சினைக்குத் தீர்வை காண தவறிவிட்டன.
விடுதலைப் புலிகள் பேச்சு மூலமான தீர்வு குறித்து நேர்மையாக இல்லாதமையால் அவர்களுடன் பேசுவது அர்த்தமற்றது என்பது தெளிவு என்றும் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். எனினும் இறுதியாக நிரந்தரத் தீர்வாக அரசியல் தீர்வொன்றே ஏற்பட வேண்டுமெனவும், தனது எண்ணமும் அரசியல் தீர்வே எனவும் குறிப்பிட்டார்.
கடந்த 25 30 வருட காலப்பகுதியில் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை கொழும்பு நிறைவேற்றவில்லை என்பதை கோட்டாபய ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, கிழக்கில் இடம்பெற்ற தேர்தலை சுட்டிக் காட்டியுள்ள அவர் கிழக்கில் செய்ததை வடக்கிலும் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி உறுதியாகவுள்ளார் எனவும் கூறினார்.
கிழக்கைப் போன்று வடக்கை இலகுவாக கைப்பற்ற முடியுமா என்ற கேள்விக்கு “”விடுதலைப் புலிகள்” தாமாக விரும்பி முல்லைத்தீவுக் காடுகளுக்குள் செல்லவில்லை. அவர்கள் அங்கு துரத்தப்பட்டனர். அவர்கள் யாழ்.குடாநாட்டையோ அல்லது திருகோணமலையோ விரும்பியிருப்பார்கள். அப்பகுதிகள் அவர்களிற்கு சாதகமாக விளங்கியிருக்கும். எனினும் அவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டனர். எனினும், வடபகுதி பாரிய நிலப்பரப்பு என்பதால் அதை மீட்டு அதிக எண்ணிக்கையான படையினர் தேவைபடுகின்றனர். என்று பதிலளித்தார் கோத்தபாய.

Exit mobile version