புத்தகத்தில் இடம்பெற்றிருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், “1987 ஜூன் மாதத்தில் ‘பூமாலை நடவடிக்கை’ மூலமும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலமாகவும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்தியது.
1980களில் இந்திய உளவுத்துறையின் நிர்பந்தம் காரணமாக முக்கியக் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரை இலங்கை அரசு விடுவிக்க நேர்ந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்படவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிற்கு பிரயோகிக்கப்பட்டதனைப் போன்று அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும் அதனை ஜனாதிபதி வெற்றிகரமாக எதிர்நோக்கியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது இந்தியாவின் பங்களிப்பு குறித்து இந்தப் புத்தகத்தில் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
1980களில் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுடன் இந்தியாவிற்கு நேரடித் தொடர்பு காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரின் தன்நம்பிக்கையும் உறுதியான தீர்மானங்களுமே யுத்த வெற்றிக்கு வழிகோலின என அவர் தெரிவித்துள்ளார்.