Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளுக்குப் பணம் சேகரித்த 10 தமிழர்களுக்கு ஜேர்மனியில் சிறை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்த ஈழத் தமிழர்கள் 10 பேருக்கு ஜேர்மனிய குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் 2007ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, ஒரு இலட்சம் யூரோவைத் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டே இவரக்ள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பில்லியன் டொலர்கள் பெறுமதியான மக்கள் சொத்துக்களைப் பதுக்கியுள்ள பெரும் தலைகள் சுந்தந்திரமாகத் தலைவர்களாக உலா வரும் அதே வேளை செயற்பாட்டாளர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பெர்லின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இரு பெண்கள் உள்ளிட்ட பத்து இலங்கைத் தமிழர்களுக்கு, ஆறு தொடக்கம் 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் என்பவருக்கு 15 மாதங்களும், சுமதி உதயகுமார் என்பவருக்கு, 7 மாதங்களும், கோபாலபிள்ளை ஜெயசங்கர் என்பவருக்கு 8 மாதங்களும், பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு 22 மாதங்களும், குமணன் தர்மலிங்கம் என்பவருக்கு 6 மாதங்களும், வைத்திலிங்கம் ஜோதிலிங்கம் என்பவருக்கு 1 ஆண்டும், யோகராஜா சிறீஸ்கந்தராஜா என்பவருக்கு 1 ஆண்டும், செந்தில்குமரன் கந்தசாமி என்பவருக்கு 1 ஆண்டும், துஸ்யந்தி அருணாசலம் என்பவருக்கு 9 மாதங்களும், தயாபரன் ஆறுமுகம் என்பவருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு குற்றவியல் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதைத் தடுக்கின்ற சட்டத்தின் கீழேயே இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version