புலிகளுகுச் சொந்தமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
மாவட்டம் வெள்ளாம் முள்ளிவாய்க்கால், தேராவில் ஆகிய பகுதிகளில் பொலிசார் நடத்திய தேடுதலின்போது, பல வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் இன்ஸ்பெக்டர் லொக்கு குமாரகே தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர்கள் ஜனக மகிந்த, புஸ்பித, பொலிஸ் சார்ஜன்ட் அமித்த, பொலிஸ் கான்ஸ்டபிள்களான கங்கநாத், ரணதுங்க, கமல்சிறி, அல்விஸ் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினராலேயே இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினெட்டு பிளாஸ்டிக் கேன்களில் நேர்த்தியாக அடைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 50 லிற்றர் அசிட், 20 கிலோ நிறையுடைய சி4 வெடி மருந்து, 69 மிதிவெடிகள், அவற்றுக்கான பியுஸ்கள் 40, 175 டெட்டனேட்டர்கள், 13 கிளேமோர் வெடிகுண்டுகள், 1231 தோட்டாக்கள் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.