இவரோரு இன்னும் இருவர் கத்திக் குத்துக் காயங்களுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பான சர்ச்சையே இம் மோதல்களின் அடிப்படை என தெரியவருகிறது.
மக்கள் பலத்தில் நம்பிக்கையற்று இராணுவக் குழுக்களாகச் செயற்பட்ட ஈழப் போராட்ட அரசியலின் தொடர்ச்சியாகவே இவ்வாறான வன்முறைகள் கருதப்படுகின்றது. இலங்கை, இந்தி உளவுத்துறை மற்று ஏனைய அழிவு சக்திகள் இவ்வாறான வன்முறைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்புக்கள் காணப்படுவதாக அச்சம் பலர் மத்தியில் எழுந்துள்ளது.
சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் புலம் பெயர் நாடுகளில் மக்கள் இலங்கைப் பேரின வாத அரசின் இனவழிப்பிற்கு எதிராக பல உணர்வு மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். மக்களின் உணர்வுகளை தமது அரசியல் வியாபார நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் மாபியக் குழுக்களின் மில்லியன்கள் கைமாறும் வியாபார மோதல் இலங்கை அரசிற்கும் அதன் பின்புலத்தில் செயற்படும் அத்தனை அழிவு சக்திகளுக்குமே பயன்பட்டுப் போகும்.
உணர்வுபூர்வமான மக்கள் பகுதியினரை விரக்திக்கும் வெறுப்பிற்கும் உட்படுத்தும். இதுவரைக்கும் மோதலில் ஈடுபடும் எந்தக் குழுவினரும் மக்கள் மத்தியில் தமது உண்மைகளையோ மோதலில் உட்பொதிந்துள்ள காரணங்களையோ முன்வைத்ததில்லை. இந்த நிலையில் இலங்கை அரசிற்கு எதிரானதும் அழிவிற்கு எதிரானதுமன புதிய அரசியலின் அவசியம் உணரப்படுகிறது.