இது நகைப்பிற்கிடமாகவுள்ளது. அவர்கள் எம்முடன் மோதவில்லை. எம்மைவிட்டு ஓடுகிறார்கள். போர்நிறுத்தமொன்றுக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை. அவர்கள் சரணடைய வேண்டும். அவளவுதான்” என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ரொய்டர்ஷ் செய்திச் சேவைக்குத் தொலைபேசிமூலம் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் மோதல்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டுமெனவும்; ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளடங்கலாக இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே போர்நிறுத்தத்துக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
எனினும், விடுதலைப் புலிகளின் இந்த ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.