Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

படகுகள் தாக்கியழிப்பு : படைத்தரப்பு, புலிகள் தரப்பு

கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த கடற்படையினரின் படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முற்பட்ட புலிகளின் தற்கொலைப் படகொன்று இன்று அதிகாலை தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முல்லைத்தீவு கடற்பரப்பின் பாதுகாப்பு கடற்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதற்காக கடற்படையினரின் ரோந்துப் படகுகள் மற்றும் டோராப் படகுகள் போன்றன பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்கா தெரிவித்தார்.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் கடல்வழியாகத் தப்பிச் செல்லாதிருக்கும் வகையிலேயே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் கடற்படையின் பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது
முல்லைத்தீவு கடற்பரப்பின் வடக்குத் திசையில் நங்கூரமிடப்பட்டுள்ள கடற்படையினரின் படகுகளை இலக்கு வைத்தே புலிகள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கடற்படையினர் படகுகளை நோக்கி தற்கொலைப் படகொன்று வருவதை இனங்கண்ட படையினர் அப்படகின் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் அப்படகு முற்றாக அழிந்தது.

இத்தாக்குதலில் படகிலிருந்த இரு புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் கடற்படையினரால் சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை கடற்படையினரால் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் கடல்வழியாகத் தப்பிச் செல்லாதிருக்கும் வகையிலேயே முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் படகுகள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. அதைத் தடுப்பதால் அவர்கள் தப்பிச் செல்வதற்கான வழி கிடைக்கும் எனும் பட்சத்திலேயே இந்த தாக்குதலை நடத்த புலிகள் முற்பட்டுள்ளனர்.

ஏனைய பகுதிகளிலும் மோதல் தீவிரம்

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு, புளியம்பொக்கணை, உடையார்க்கட்டுக்குளம், பள்ளக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு தெற்கு, மற்றும் முள்ளியவளை கிழக் கு போன்ற பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை புலிகள் தரப்பு பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

மோதலை அடுத்து அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது புலிகளுக்குச் சொந்தமாகவிருந்த வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் ஆயுத உபகரணங்கள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன
இதே வேளை,
 
 

 

 முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று கடுமையான மோதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற கடற்சண்டையில் கடற்படையின்  இரண்டு வேகத்தாக்குதல் படகுகள் கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்படடதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version