அதிகாலை 6.30 மணியளவில் குண்டுவீச்சை துவக்கிய விமானங்கள் பகல் 12.30 மணி வரை பல்வேறு பகுதிகளில் குண்டுகளை வீசியதாக விமானப்படை செய்தி தொடர்பாளர் ஜனக நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தெற்கு புதுக்குடியிருப்பில் இலங்கையின் அதிரடிப்படையினர் விடுதலைப் புலிகளின் பதுங்குமிடங்களை கைப்பற்றியிருக்கிறார்கள்.
சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரின் பதுங்குமிடமும், புலிகளின் முகாமும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த தலைவரின் பதுங்குமிடம் ஆடம்பர வசதிகளுடன் காணப் பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து முன்னேறிய ராணுவம் அப்பகுதியில் உள்ள புலிகளின் இரண்டாவது முகாமையும் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளை முறியடித்து ராணுவம் பிடித்துள்ள இரண்டாவது முகாமில் நான்கு கட்டிடங்கள், அதிநவீன கண்டெய்னர்கள் இரண்டு, தண்ணீர் பம்புகள், பெட்ரோல், மண்ணெண்ணெய் பேரல்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.