02.11.20008.
களனிதிஸ்ஸவில் மொத்தம் 550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சேத மடைந்த இரண்டு மின்தொகுதிகளும் 275 மெகாவாட் உற்பத்தித் திறன் ண்டவை. இவை இயங்காததால் நாளொன்றுக்கு 2.4கோடி ரூபா நட்டம் ஏற்படும் என்று மின் சாரசபை அறிவித்திருக்கிறது. இந்த நிலை 3 மாதங்கள் வரை நீடிக்கலாம். அதேவேளை களனிதிஸ்ஸ மின் நிலையத் துக்கு ஏற்பட்ட சேதங்களை திருத்தியமைக்க ஆறு மாதங்கள் தேவைப்படும் என்று மின் சக்தி அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரி வித்திருக்கிறார்.
இந்தத் தாக்குதலால் இரவு நேரத்தில் மின் வெட்டு நடைமுறைப்படுத்தபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரியவருகிறது. ஆக, இந்த தாக்குதலில் புலிகள் ஏற்படுத்தி யிருக்கின்ற சேதம் கடந்த ஏப்ரலில் கொலன் னாவ எரிபொருள் குதங்கள் மீதான தாக்குத லில் ஏற்படுத்தப்பட்டதை விடவும் அதிகமானது. அதேவேளை புலிகளின் விமானங்கள் கொழும்பு வரை வந்து தாக்குதல் நடத்தி விட் டுப் போகும்வரை வேடிக்கை பார்த்திருந்ததா? எங்கே உங்களின் வான் பாதுகாப்பு சாதனங் கள் என்று கேள்விகள் அரசை நோக்கி வீசப் பட்டுக் கொண்டிருக்கின்றன.