புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர்- எரிக் சொல்ஹெய்ம்.
இனியொரு...
சிறிலங்கா ஊடகவியலாளர்களை ஓஸ்லோவில் சந்தித்த போது அவர்களுடனான கருத்துப்பரிமாறலின் போதே எரிக் இக்கருத்தை வெளியிட்டார். குமரன் பத்மநாதனும், பூலித்தேவனும் சரணடைதல் தொடர்பாக பேசியதாகவும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய விரும்பபியதாகவும் மே.மாதம் 17-ஆம் தியதி இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்த எரிக் சோல்ஹெய்ம் சரணடைந்த பின்னரான படுகொலைகள் குறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இலங்கை இனப்பிரச்சனை அரசியல் ரீதியாக நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டியது என்றார் எரிக்.