தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் தயா மாஸ்டருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடுமென பிரபல சிங்கள இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்க ஆலோசகர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு தமிழ் வாக்குகளை இதன் மூலம் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் மற்றும் கருணாவை உயர் பதவிகளில் அமர்த்தியதன் மூலம் பெருந்தொகையான வாக்குகளை அரசாங்கம் பெற்றுக் கொண்டதனை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, ஆளும் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகி, தயா மாஸ்டருக்கு அந்தப் பதவி வழங்கப்படலாம் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.