தமது கிளப்பிற்காக மோதிக்கொண்டு சிறை சென்றவர்கள் பலர். மக்களின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டு மில்லியேனேர்கள் தங்கள் வருமனத்தையும் பெறுமதியையும் உயர்த்திக்கொள்கிறார்கள்.
கிளப்களின் வருவாயின் பெரும்பகுதி அடையாளங்களை விற்பனை செய்வதன் ஊடாகவே பெறப்படுகின்றது. அவர்களது சின்னம் பொறித்த மேலங்கிகள், தொப்பிகள், சப்பாத்துக்கள், கையுறைகள், கொடிகள் போன்றன சிறுவர்கள் கூட விரும்பி வாங்கிக்கொள்ளும் அடையாளங்கள். உதைபந்தாட்ட சூதாட்டத்தில் அதிகமாகப் பணம் சம்பாதிப்பவர்கள் மொனோக்கோ நாட்டில் தமது வாழக்கையை அமைத்துக்கொள்கின்றனர்.
இனிவரும் காலங்களின் மொனோக்கோவில் குடியேறிய தமிழர்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தாலும் வியபடைவதற்கில்லை.
ஆயிரக்கணக்கான மக்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் வியாபார வெறியாக மாற்றிப் பணம் சேர்க்கும் ஒரு கூட்டம் எமக்கு மத்தியில் முளைத்து முழுச் சமூகத்தையும் சூறையாடிவருகிறது. சர்வதேச நாடுகளைப் பிடித்து ஈழம் பெறுவோம் என மக்களை ஏமாற்றும் இந்தக் கும்பல்கள், மக்களின் கண்ணீரைப் பணமாக்கி வயிற்றுப்பிழைபு நடத்தக் கற்றுக்கொண்டுள்ளது.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மாபியாக் கும்பல்களின் கைகளில் சிக்குண்டு சிதைக்கப்படுகிறது.
சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இன வெறியாக மாற்றி பிழைப்பு நடத்தும் இக்கும்பல்கள் சமூகத்திலிருந்து அகற்றப்படும் வரை போராட்டம் ஒரு அங்குலம் கூட முனோக்கி நகராது.