Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளிடமிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன : ஜெயலலிதா அரசின் காவல் நாடகம்

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடமிருந் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக ஜெயலலிதா அரசின் தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இல்லாத புலிகள் அமைப்பை தடைசெய்ய ஜெயலலிதா அரசும் தடையை நீக்க வை.கோ உம் மோதிக்கொள்ளும் முழு நீள நகைச்சுவை நாடகம் நீதிமன்றில் அரங்கேறி வருகின்றது. இதில் ஜெயலலிதாவிற்கு ஈழத் தாய் இரட்டைவேடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீடிப்பு தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் புலிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருவதாக அரச தரப்பு சட்டத்தரணி ஜெயின் தலைமையிலான குழுவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். எனவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version