Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளால் ஏற்படும் பாதுகாப்புச் சவாலை கடற்படை முறியடிக்கும்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து புதியதாக ஏற்படக்கூடிய பாதுகாப்பு சவாலை முறியடிக்க வேண்டிய முதல் பொறுப்பு உள்ளதால் இலங்கை கடற்படை உஷாராக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புலிகளின் மரபு ரீதியான பலம் அழிக்கப்பட்டிருந்தாலும், எத்தகைய சவாலையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இலங்கை கடற்படை இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், புலனாய்வு அமைப்புகளிடம் கடற்படை நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும், கடல்வழியாக ஆயுதங்களையோ போராளிகளையோ இலங்கைக்குள் கொண்டு வரும் முயற்சிகளை முறியடிப்பதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது என்றும் கோத்தபய கூறியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோமாலியா கடற்கொள்ளையர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் யாரும் கண்டுகொள்ளவில்லை, ஆனால், இன்று அவர்கள் சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளனர். அவர்களிடம் எந்த ஆயுதபலமும் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகளிடம் கப்பல்கள், நவீன படகுகள் ஆகியவை இருந்தன. எனவே, கடற்படை உஷாராக இருக்க வேண்டும் என்றும் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளதாக இணையதளச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version