புலம் பெயர் புலிகளிடையேயான மோதல் வன்முறை வடிவங்களில் ஆரம்பித்துள்ளது..
இனியொரு...
முன்னை நாள் புலம்பெயர் புலிகளின் உறுப்பினர் ஒருவர் ஆயுதம் தாங்கிய தமிழ்க் குழு ஒன்றினால் நேற்று இரவு (04/04/2011) அவரது வீட்டிற்கு முன்னால் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். லண்டனின் நடைபெற்ற இந்தத் தாக்குதல் புலிகளின் முன்னை நாள் புலம்பெயர் உறுப்பினர்களிடையேயான பிளவின் வன்முறை மோதலாகக் கருதப்படுகிறது.
இந்த வன்முறை மேலும் தொடரலாம் எனவும் இலங்கை அரசும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்புக்களிடையேயான மோதலின் நேரடி விளைவுதான் இத் தாக்குதல் என நம்பகமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இணையத் தளங்கள் ஊடான மோதலின் பின்னர் இத் தாக்குதல் வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளன.