Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் அழிந்து போகும் சூழல் உருவாகியுள்ளது

tamils-protest-june-9thஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து செயற்படத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஆசிய சட்ட மா அதிபர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு நல்லாட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவ நல்லாட்சியை ஏற்படுத்த ஏற்கனவே 19ம் திருத்தச் சட்ட நகல் வரைவுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்ததாகவும், யுத்த நிறைவின் பின்னரும் இந்த நிலைமை நீடித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைத்தல் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிக்கலான சூழலை நோக்கித் தள்ளப்படும். ராஜபக்சவைத் தண்டிபதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட இந்த அமைப்புக்களை நோக்கி எமது நோக்கமும் அதுவே என இலங்கை அரசு கூற ஆரம்பித்துள்ளது. ஆக, அவர்கள் நோக்கங்களற்ற வெற்றுச் சூழலை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். நினைவு தினங்களை நடத்தும் அஞ்சலி அமைப்புக்களாக மட்டுமே அவர்கள் நீடிக்கும் நிலை காணப்படுகிறது.

Exit mobile version