சரி தவறு என்பதற்கு அப்பால் மக்கள் முற்றாக நிராகரிக்கும் அரச துணைக்குழுக்கள் தாம் இராணுவத்துடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதாக புலம் பெயர் தொலைக்காட்சிகளில் ஒப்பதல் வாக்குமூலம் அழித்திருக்கிறார்கள். வவுனியாவில் அரசியலில் நேரடியாக ஈடுபட்ட நிமோ என்பவர் மர்மமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கை சென்று ஒரு சில நாட்கள் தங்கியிருக்கும் ஊடகவியலாளர் சுற்றுலா விதிகளை மீறி நடக்கிறார்கள் என்பது கேலிக்கூத்து.
இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் சுற்றுலா விதிகளை மீறுபவர்கள், சமூக விரோதிகளும் இனக்கொலையின் ஆதரவாளரகளும் அரசின் விருந்தாளிகள்.
இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைக்குள் ‘சுந்திரமாக இலக்கிச்சந்திப்பு நடத்தி’ ‘சங்கம்’ வளர்த்தவர்களும், கிழக்கு மாகணத்தில் பிள்ளையானதும் கருணாவினதும் ‘அழிவியில்’ ஆலோசகர்களும் மகிந்த சிம்மாசனத்தின் அரசவைக் கவிஞர்கள்.
கைதான பிரபாகரனுக்கான நியாயத்தை ஜுனியர் விகடன் இதிலிருந்து தேடிக்கொள்ளலாம்.
பிரித்தானியப் பிரசா உரிமைபெற்ற இரண்டு சுற்றுலாப் பயணிகளின் இலங்கை அரசியலில்:(இலங்கையில் பல்கலைக்கழகத்தில் அரசியல் சந்திப்புக்களை நடத்தில் சிறீ ரெலோ என்ற அமைப்புச் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இவை.)