Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம்பெயர் புலிசார் வர்த்தகர்களிடம் கப்பம் கோரும் இலங்கை அரசு!

 புலம்பெயர் தமிழரும்,  அமெரிக்க பில்லியனருமான ராஜரட்னம் ஒரு மில்லியன் டொலரை இலங்கை அரசிற்கு வழங்க முன் வந்திருப்பதாக இலங்கை அமைச்சர் மொரகொட தெரிவித்த அதே, வேளை ராஜரட்ணத்திடமுள்ள புலிகளின் முதலீடுகளைக் காரணம்காட்டி மிரட்டியதனூடாக இலங்கை அமைச்சர்கள் பெருந்தொகைப்பணத்தைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டனர் என்று இணையச் செய்தியொன்று கூறுகிறது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர், புலம்பெயர் நாடுகளிலிருந்து புலிகள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்புண்டு என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை அரசும் இந்திய அரசும் இரண்டு முக்கிய விடயங்களை புலம் பெயர் நாடுகளில் முன்னெடுத்து வருகின்றன. முதலாவதாக புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசு குறித்த பய உணர்வொன்றை ஏற்படுத்தல். இரண்டாவதாக புலிகள் வசமுள்ள பணமுதலீடுகளைக் கப்பமாகப் பெற்றுக்கொள்ளல்.

அம்சாவின் இட மாற்றமும், புதிய ஜேர்மனியத் தூதரின் வருகையும் இதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. தவிர, புலம் பெயர் நாடுகளிலுள்ள அரச சார்பு இணையங்கள் இவ்வாறான நடவடிக்கைகளின் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இலஙகை அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும், புலிசார் நிலை குறித்த வதந்திகளைப் பரப்பியும் வரும் அரச சார் குழுக்கள், இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலை தமது வியாபார நோக்கங்களுக்காக நடைமுறைப் படுத்துவதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், கனடாவை மையமாகக் கொண்ட புலிகளின் முதலீட்டைக் வைத்திருக்கும் இலங்கை மில்லியனர் ஒருவர் கடந்த சனியன்று இலங்கை அரச குழுக்களால் பணம்கோரி மிரட்டப்பட்டுள்ளதாக இனியொருவிற்குத் தெரியவருகிறது.

ஐரோப்பாவில் கிரிமினல் குழுக்கள் போன்று செயற்பட்டுவரும் இலங்கை அரசு புலிகள் மத்தியில் எழுந்துள்ள உள்முரண்பாட்டைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது .

மக்களின் பணம் மறுபடியும் சமூகவிரோதிகளின் கைகளுக்கு மாறும் அபாயம் உள்ளது என்பதே இங்கு கருத்தில் கொள்ளவேண்டிய அபாயகரமான சூழலாகும்.

-செய்தி ஆய்வு-

Exit mobile version