Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம்பெயர் சிறுவியாபாரிகளையும் உழைப்பாளர்களையும் குறிவைக்கும் பிரித்தானியச் சட்டம்

skybreakerபிரித்தானிய குடிவரவு துறையினர் அண்மைக்காலமாக “Operation Skybreaker” எனும் பெயரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், வேலை செய்யும் அகதிகளிற்கு எதிராக கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இந்த நடவடிக்கையானது குடிவரவு துறையினரால் அனுமதி மற்றும் பத்திரங்கள் இல்லாமல் தொழில் செய்கின்றார்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற, குறிப்பிட்ட சிறுபான்மையினரால் நடத்தப்படுகின்ற வியாபார நிறுவனங்களை குறிவைத்தே செயற்படுத்தப்பட்டு வருகின்றது. லண்டன் “Wembley” நகரப்பகுதியில் தற்போது செயற்படுத்தப்படுகின்ற இந்த நடவடிக்கை சம்பந்தமாக “Brent Anti Racism Campaign” எனும் அமைப்பினர் விழிப்புணர்வு மற்றும் சட்ட ஆலோசனைகளை மக்களுக்கும் வியாபார நிறுவனங்களிற்கும் ஏற்படுத்தும், வழங்கும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை எதிர்வருகின்ற சனிக்கிழமை Oct 4ந் திகதி 1-4 மணிவரை Create Space London, Wembley point, 11th floor, 1harrow road, Wembley, Middlesex HA96DE எனும் முகவரியில் நடத்த உள்ளனர்.
Operation Skybreaker எனும் இந்த நடவடிக்கையின்போது “பார்ப்பதற்கு சந்தேகமாக உள்ள” நபர்கள் என குடிவரவு துறையினரால் சந்தேகிக்கப்படுகின்ற அனைவரும் குறிவைக்கப்படலாம். பிரித்தானிய குடிவரவு துறையினரின் இந்த நடவடிக்கையானது உள்ளூர் சமுதாயத்திற்குள் தேவையற்ற ஒரு பயத்தையும் பிளவுகளையும் அதிகரிப்பதற்கு காரணமாகவும் அமையலாம். அதனைவிட குடிவரவு துறையினரால் தற்போது மக்களிடம் கையொப்பம் வாங்கிவரப்படுகின்ற “Waver forms” எனும் படிவம் மக்களது அனுமதியில்லாமல் அவர்களின் வீடுவளவிற்குள் சென்று சோதனை செய்ய அனுமதிக்க கோரும் ஒரு படிவமாகும். இந்த படிவத்தில் யாரும் கட்டாயமாக கையெழுத்திடவேண்டும் என்ற சட்டதிட்டங்களும் இல்லை. நீங்கள் விரும்பினால் குடிவரவு துறையினர் உங்களது வியாபார நிறுவனங்களிற்குள், வீடுகளிற்குள் உட்புகுவதற்கு அனுமதி வழங்காமலும் விடலாம்.
ஆக எங்களிற்கு, அகதிகளிற்கு, வியாபார நிறுவனங்களிற்கு இருக்கும் உரிமைகள் தொடர்பாகவும், குடிவரவு துறையினரால் உங்களுக்கு ஏற்படுத்தப்படும் அசௌகரியங்களை தடுப்பதற்கு நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். உங்களுக்கு இருக்கும் உரிமைகளையும், உங்களை காத்துகொள்ள தேவையான அமுலில் இருக்கும் சட்டதிட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்; அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Exit mobile version