Operation Skybreaker எனும் இந்த நடவடிக்கையின்போது “பார்ப்பதற்கு சந்தேகமாக உள்ள” நபர்கள் என குடிவரவு துறையினரால் சந்தேகிக்கப்படுகின்ற அனைவரும் குறிவைக்கப்படலாம். பிரித்தானிய குடிவரவு துறையினரின் இந்த நடவடிக்கையானது உள்ளூர் சமுதாயத்திற்குள் தேவையற்ற ஒரு பயத்தையும் பிளவுகளையும் அதிகரிப்பதற்கு காரணமாகவும் அமையலாம். அதனைவிட குடிவரவு துறையினரால் தற்போது மக்களிடம் கையொப்பம் வாங்கிவரப்படுகின்ற “Waver forms” எனும் படிவம் மக்களது அனுமதியில்லாமல் அவர்களின் வீடுவளவிற்குள் சென்று சோதனை செய்ய அனுமதிக்க கோரும் ஒரு படிவமாகும். இந்த படிவத்தில் யாரும் கட்டாயமாக கையெழுத்திடவேண்டும் என்ற சட்டதிட்டங்களும் இல்லை. நீங்கள் விரும்பினால் குடிவரவு துறையினர் உங்களது வியாபார நிறுவனங்களிற்குள், வீடுகளிற்குள் உட்புகுவதற்கு அனுமதி வழங்காமலும் விடலாம்.
ஆக எங்களிற்கு, அகதிகளிற்கு, வியாபார நிறுவனங்களிற்கு இருக்கும் உரிமைகள் தொடர்பாகவும், குடிவரவு துறையினரால் உங்களுக்கு ஏற்படுத்தப்படும் அசௌகரியங்களை தடுப்பதற்கு நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். உங்களுக்கு இருக்கும் உரிமைகளையும், உங்களை காத்துகொள்ள தேவையான அமுலில் இருக்கும் சட்டதிட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்; அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.