யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவான சிறிய தமிழ் கட்சியான ஸ்ரீடெலோ அமைப்பின் அலுவலகத்தில் பெட்ரொல் குண்டு வீசிய சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்துறை சொல்கிறது. .
சிறீ டெலோ என்ற அமைப்பு புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்ற இலங்கை அரச கைக்கூலிகளால் நடத்தப்படும் அமைப்பாகும். வன்னியில் போரில் துரத்தப்பட்ட அகதிகளிடம் கப்பம் கோருதலே இவர்களின் முதல் நடவடிக்கையாக இருந்தது. இதன் உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெறவிருந்த இலக்கியச் சந்திப்பு மற்றும் புதிய பண்பாட்டுத் தளம் ஆகியவற்றிலும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
கைதுசெய்யப்படுள்ள தமிழ் மாணவர்கள் நான்கு பேரும் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டு டிஐடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
குறைந்தபட்சம் இந்த மாணவர்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொடர்புடைய பதிவு:
ஒடுக்கு முறையின் உள்ளூர் முகங்கள் – தீபம் தொலைக்காட்சியில் விவாதமும் அவதூறுகளும்