Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புனர்வாழ்வு முடிவதற்கு முன்னர் மாணவர்களை விடுவிக்க முடியாது : கோத்தாபய

கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பல்கலைக்கழக மாணவர்களையும் புனர்வாழ்வு வழங்கிய பின்னரே விடுவிக்க முடியும். அதற்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு சாத்தியமே இல்லை என கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் ஏன் போகவேண்டும்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? பல்கலைக்கழகத்துக்குள் சென்று இவர்கள் பயங்கரவாதத்தைத் தூண்டு விடுகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவரின் பின்னணியிலேயே கடந்த காலச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றை நாங்கள் ஆதாரத்துடன் நிரூபிப்போம். மாணவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கிய பின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற விடயம் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட பல்கலைக்கழக சமூகத்திடம் நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கின்றோம். என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட கிழக்கிலிருந்து இராணுவம் முழுமையாக வெளியேறத் தேவையில்லை என்று பேரினவாதப் புராணம் பாடும் நிலையில் இனக் கொலையாளி கோதாவின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதே வேளை தேசியக் கூட்டமைப்பு மாணவர்களை விடுதலை செய்வதற்காக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக ஏமாற்றிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Exit mobile version