
ஊறணி பிரதேச பொதுமக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். மட்டு.பிள்ளையாரடியில் ஆரம்பமான ஊர்வலம் புத்தர் சிலை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வரவேற்பு இடத்தை சென்றடைந்தது.
இந்த ஆப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு, புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே, புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் புத்தர் சிலை வைப்பதற்கு எதிரான கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.