Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுவையிலும் மாணவி மீது பாலியல் பலாத்காரம்

புதுச்சேரியில் டியூசனுக்கு சென்ற மாணவியை தனியார் பேருந்து நடத்துனர் முத்து மற்றும் அவரது நண்பர் வெங்கடாச்சலம் ஆகியோர் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று ஒரு குடிசையில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

மாணவியைக் காணாதது பற்றி காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததே பலாத்காரத்திற்குக் காரணம் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தையை மருத்துவமனையில் சந்திக்க நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. இதனால் அவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினர். இதனிடையே மாணவிகளின் நெடும் போராட்டத்துக்கு பின்னர் மாணவியின் தந்தையை மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்தது.
இந்த விவகாரத்தால் காலையில் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 500க்கும் அதிகமான மாணவிகள், பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
பாலியல் பலாத்காரம் என்பது அதிகாரவர்க்கம் மற்றும் ஆதிக்க சாதிகளின் மேலாதிக்க ஆயுதமாகத் திகழ்ந்து வருகிறது. இயல்பிலேயே பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் கருத்தியலைக்கொண்ட இந்துத்துவா கருத்தியல் ஆதிக்கத்தில் இருக்கும் கிரிமினல்களால் பரப்பட்டு சினிமா, ஊடகங்கள் போன்ற பிரச்சாரச் சாத்னாங்கள் ஊடாக இன்று ஏழை கிரிமினல்கள் வரை பரவியுள்ளது.

Exit mobile version