Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுமாத்தளன் வைத்தி்யசாலை செயலிழந்துள்ளது

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் புதுமாத்தளன் வைத்தி்யசாலையை அண்மித்த பகுதியி்ல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியிலிருந்து இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து. அந்த வைத்தியசாலை செயலிழந்துள்ளதாக அங்குள்ள வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான கடும் மோதல்களையடுத்து, வைத்தியசாலையும் பாதிக்கப்பட்டதாகவும், இதனால், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பலரும் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடியதுடன், அங்கு கடமையிலிருந்த வைத்தியர்கள், ஊழியர்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் பாதுகாப்பு வலயத்தின் உள்ளே சென்றுள்ள அதேவேளை, பலர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் சேர்ந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் பணியாற்றி வந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த வெளிநோயாளர் பிரிவுகள் அமைந்துள்ள நிலையங்களுக்குச் சென்று, அங்கு பணியாற்றுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Exit mobile version