புதுச்சேரி அரசைக் கவிழ்த்த பாஜக தேசியக் ஜனநாயகக் கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கி என்.ஆர். காங்கிரஸ் கட்சியை கட்டாயப்படுத்தி கூட்டணியில் இணைத்தது. என்.ஆர் காங்கிரஸ் கட்சிதான் புதுச்சேரி மக்களிடையே தனித்த செல்வாக்குள்ள கட்சி. அதன் தலைவர் ரங்கசாமி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்றுதான் பாஜக கூட்டணிக்குச் சென்றார். ஆனால் அவர்களோ ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று அவரும் நம்பினார். அவரும் செல்லும் இடங்களில் எல்லாம் நானே முதல்வர் என்கிறார்.
மொத்தத்தில் ரங்கசாமியும் நானே முதல்வர் என்கிறார் நமசிவாயமும் நானே முதல்வர் என்கிறார்.
உண்மையில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெல்லும் பட்சத்தில் பாஜக வேறு திட்டத்தை வைத்திருக்கிறது. ரங்கசாமி, நமசிவாயம் இருவரையும் ஒதுக்கி விட்டு ஆளுநராக இருக்கும் தமிழிசையை புதுச்சேரி முதல்வராக்குவதுதான் பாஜகவின் திட்டம். இன்னொரு முடிவாக நிர்மலா சீத்தாராமனையும் பாஜக தயார் படுத்தி வைத்துள்ளதாம்.