Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுச்சேரியை பாஜகவுக்கு தாரை வார்த்தது அதிமுக!

தென் மாநிலங்கள் எதிலும் பாஜகவுக்கென்று கட்சி கட்டமைப்போ சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களோ கிடையாது. புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆளுநர் கிரண்பேடி நியமன உறுப்பினர்களாக மூன்று பாஜக உறுப்பினர்களை நியமித்தார். மற்றபடி புதுச்சேரியில் ஒரு வார்ட் தேர்தலில் கூட பாஜக இதுவரை வென்றதாக சரித்திரம் இல்லை.

அங்கு என்.ஆர். காங்கிரஸ்,  காங்கிரஸ், திமுக, அதிமுக, போன்ற கட்சிகளே செல்வாக்குள்ள கட்சிகளாக உள்ளன. இந்நிலையில், புதுச்சேரியைக் கைப்பற்றும் நோக்கோடு பாஜக திவீரமாக களமிரங்கியுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோரே அதிக கவனம் எடுத்து அடிக்கடி வந்து போகும் அளவுக்கு புதுச்சேரியைக் கைப்பற்ற பாஜக முடிவு செய்துள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலிலும் இதே போன்று பாஜக கவனம் செலுத்தியது. ஆனாலும் அக்கட்சி  ஹைதராபாத் மாநகரகாட்சித் தேர்தலில் தோற்றது. ஆனால், புதுச்சேரியில்  காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களை ராஜிநாமா செய்ய வைத்து தன் கட்சியில் இணைத்துக் கொண்ட பாஜக புதுச்சேரியில் பலம் பெற்றது  இப்படித்தான்.

புதுச்சேரி அரசை கவிழ்த்த பாஜக  ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் நாராயணசாமியும் அவரது கட்சி உறுப்பினர்களும் ராஜிநாமா செய்ததால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாமல் போனது. உண்மையில் புதுச்சேரி பாஜக-அதிமுக கூட்டணி எப்போது உருவானது என யாருக்கும் தெரியாது. தமிழகம் போன்றே ரகசியம் அது.

அதிமுகவை தன் கைக்குள் வைத்திருக்கும் பாஜக என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு இதில் பெரிய ஆர்வம் இல்லை. அவர் தனித்து நின்று வெற்றி பெறும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர். தவிறவும் பாஜக அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நமச்சியாவத்தை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதே பாஜகவின் திட்டம் என்னும் நிலையில் ரங்கசாமி இதற்கு சம்மதிக்கவில்லை.

பின்னர் ரங்கசாமியை நிர்பந்தித்து கூட்டணிக்குள் கொண்டு வந்த பாஜக ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு. 16 தொகுதிகளை ரங்கசாமிக்கு ஒதுக்கியுள்ளது. மீதியுள்ள 14 தொகுதிகளை பாஜகவும்-அதிமுகவும் பங்கிட்டுக் கொள்வோம் என பாஜகவே அறிவித்துள்ளது.

அதவாது பாஜகவை விட வலுவான அதிமுகவுக்காக ரங்கசாமியிடம் பேரம் பேசியதே பாஜகதான்.  அதிமுகவை கிட்டத்தட்ட புதுச்சேரியில் கைப்பற்றி விட்ட பாஜக 14 தொகுதிகளில் குறைவான தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

சென்ற ஆண்டுவரை புதுச்சேரியில் செல்வாக்கோடு இருந்த அதிமுக இந்த தேர்தலில்  தேர்தலுக்கு முன்பே காணாமல் போய் விட்டது என புதுச்சேரியில் பேசிக் கொள்கிறார்கள்.

Exit mobile version