Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுச்சேரியில் ஆட்சியமைக்க முயன்று தோற்ற பாஜக!

புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் பாஜக பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. மக்களிடம் சென்று வாக்குப் பெற்று வென்று ஆட்சியமைப்பது வேறு. ஆனால், பிற கட்சிகளை உடைத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கோவா, கர்நாடகா, மத்தியபிரதேசம், போன்ற மாநிலங்களில் செய்தது போல புதுச்சேரியிலும் செய்ய முயன்றது பாஜக ஆனால் அதன் முதல் முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை.

பாகுர் தொகுதி உறுப்பினர் தனவேலு, நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ண ராவ்,ஜாண் குமார்,லட்சுமி நாராயணன், திமுக உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோரும் ராஜிநாமா செய்தனர்.  மொத்தம் ஏழு உறுப்பினர்கள் காங்கிரஸ் திமுகவில் இருந்து விலகினார்கள். இது போக புதுச்சேரி சபாநாயகர் சிவகொழுந்தும் பாஜகவுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். இது அனைத்தும் பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி செய்த வேலைகள். அரசும் கவிழ்ந்து விட்டது.

ஆனால், கவிழ்ந்த பிறகு பாஜக நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. விலகியவர்களில் நமச்சியாவமும், தீப்பாந்தானும் மட்டுமே பாஜகவில் இணைந்தார்கள் வேறு எவரும் இணையவில்லை. காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாஜகவுடன் தற்காலிகமாக கை கோர்த்த ரங்கசாமி ஆட்சிக் கவிழ்ந்த பின்னர் பாஜகவை கண்டு கொள்ளவில்லை. அவரை முதல்வராக்குறோம் நீங்கள் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோருங்கள் என்று பாஜக சொன்ன போதும். இல்லை வேண்டாம் நான் மக்களை சந்தித்து  அவர்கள் வாக்களித்து முதல்வராகிறேன் என்று ஆட்சியமைக்க உரிமை கோர மறுத்து விட்டார்.

அதே போன்று  ஜாண்குமார், திமுக உறுப்பினர் வெங்கடேசன், ஆகியோர் மிரட்டப்பட்டு பதவியை ராஜிநாமா செய்த பின்னர் பாஜகவில் இணைய  சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் தீப்பாந்தானையும் நமச்சியாவத்தையும் வைத்து புதுச்சேரியில் ஆட்சியமைக்க முடியாமல் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்துள்ள பாஜக,. அங்கு தேர்தல் பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளது.

இன்று மோடி கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு காங்கிரஸ் எம்,பி வைத்தியலிங்கம் செல்லவில்லை. ஒரு எம்.பி என்ற முறையில் அவரது பெயரும் அழைப்பிதழில் இருந்த போதும் மோடியின் பிரச்சார விழாவை வைத்தியலிங்கம் புறக்கணித்தார். புதுச்சேரியில் பிரச்சாரத்தை முடித்து விட்டு கோவை பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை சென்றார் பிரதமர்.

Exit mobile version