Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுக்குடியிருப்பில் கடும் மோதல்;புலிகள் 37 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

11.03.2009.

வன்னியில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசம் மும்முனைகளினூடாகவும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.இதன்போது, இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் படையினரது தீவிர முன்நகர்வையடுத்து சுமார் 37 சதுர கிலோமீற்றருக்குள் புலி உறுப்பினர்கள் அனைவரும் முடக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமது நிலைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக படையினருக்கு எதிரான கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவற்றை முறியடித்தவாறு படையினர் மேலும் முன்நகர்ந்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

மோதல்கள் தொடர்பில் இராணுவ பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் 53, 55, மற்றும் 58 ஆவது படையணியினர் தீவிர முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படைத்தரப்பு தெரிவித்தது.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது சுமார் 37 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பிலுள்ள தமது நிலைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக புலிகள் பலத்த எதிர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். படையினரின் இந்த நடவடிக்கைகளை முறியடித்து வருகின்றனர். அதேவேளை கரும்புலி உறுப்பினர் ஊடுறுவி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஊடறுப்புத் தாக்குதல்களின் புலிகள் இயக்கத்தின் சுமார் 400 பேர்வரை ஈடுபட்டுள்ளதுடன் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்களான லோரன்ஸ் மற்றும் சுவர்ணம் ஆகியோரும் பங்களிப்பு வழங்கியுள்ளனர். படையினரின் பதில் தாக்குதல்களை அடுத்து பலத்த இழப்புக்களுடன் புலிகள் பின்நகர்ந்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில தினங்களாக புதுக்குடியிருப்பு, புதுமத்தளன், மற்றும் சாலை பகுதிகளில் இடம்பெற்ற கடும் மோதல்களின் போது 200க்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். மோதல்களை அடுத்து படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் 165 சடலங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

 

 

Exit mobile version