புதிய திசைகள் ஏற்பாடுசெய்திருந்த கலந்துரையாடலும் கருத்துப்பரிமாறலும் இன்று 06/02/2011 கிழக்கு இலண்டனில் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்த பலர் விவாதங்களிலும் உரையாடலிலும் கலந்து கொண்டனர்.
பின்வரும் விடயங்கள் உரை மற்றும் விவாதங்கள் வடிவில் நிகழ்த்தப்பட்டன:
1. இன்றைய உலகச்சூழலும் மக்கள் மத்தியிலான் முரண்பாடுகளும்.
2. ஆசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் புதிய உலக ஒழுங்கும்.
3. 2008 இலிருந்து இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்.
4. புலிகளின் சர்வதேசம் குறித்த புரிதல்- எதிரிகளுடனான சமரம்
5. புரிதலிலிருந்து குறுந்தேசியம்.
5. ஒடுக்கப்பட்ட மக்களுடனான இணைவு.
6. இலங்கையில் தேசிய இனங்களும் வரலாற்றாய்வும் – தேசிய இனம் குறிதத வரைவு.
7. 30 ஆண்டுகாலப் போராட்டத்தின் அழிவும் இன்றைய போராட்டத்திற்கான தேவையும் ஒடுக்கப்படுதலும்.
8. இந்திய அரசும் ஐரோப்பிய அரசுகளும்
9. தன்னார்வ நிறுனங்களும் கே.பியும்
11. புலம் பெயர் நாடுகளில் கட்டமைக்கப்படும் இலங்கை அரசின் வலைப்பின்னல்.
12. சிங்கள மக்களின் உணர்வும் அரச பாசிசமும்.
14. புலம் பெயர் அமைப்புக்கள்
15. இன்றைய காலகட்டத்தின் புலம் பெயர் சமூகத்தின் கடமை.
ஐந்து மணி நேரம் நிகழந்த ஒன்று கூடலில்,
பின்வரும் முடிவுகளுக்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
1. இலங்கை அரசின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அங்கு ஜனநாயக சூழலை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை அதிகார அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளல்.
2. இலங்கையில் திட்டமிட்டு உருவாக்கபடும் சிங்களக் குடியேற்றங்களுக்கும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கும் எதிராக வெகுஜன அமைப்புக்களை ஊக்கப்படுத்தல்.
3. இலங்கை இந்திய அரசுகளின் உளவியல் யுத்ததிற்கு எதிரான நடைமுறைத் தந்திரோபாயங்களைப் கண்டறிதல்.
4. சிங்கள மக்கள் மத்தியில் பேரின வாதத்திற்கு எதிரான வேலைகளை முன்னெடுத்தல்.
5. இனப்படுகொலையை ஆவணப்படுத்தல்.
6. புலம்பெயர் நாட்டு மக்களிடமிருந்து சாட்சிப்பத்திரம் ஒன்றைத் தயார் செய்தல்.
உரையாடல் குறித்த மேலதிக கட்டுரைகள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறான கலந்துரையாடல்களை சாத்தியமான அனைத்துப் பிரதேசங்களில் ஒழுங்குசெய்வதாகவும் தீர்மானிகப்பட்டது.