புதிய ஜனநாயக கட்சியின்
யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு இல – 6
நுவரேலியா மாவட்டம் சுயேச்சைக் குழு இல – 5
ஊடகங்களுக்கான அறிக்கை, 27.02.2010
புதிய ஜனநாயக கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திலும், மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்திலும் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுகின்றது. யாழ் மாவட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் முதன்மை வேட்பாளராகவும், நுவரேலியா மாவட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா முதன்மை வேட்பாளராகவும் தலைமை தாங்குகின்றனர். யாழ் மாவட்டத்தில் சுயேட்சைக் குழு–6லும், நுவரேலியா மாவட்டத்தில் இல–5லும் போட்டியிடும் தேர்தல் சின்னம் கேத்தல் ஆகும்.
“மக்களுக்கான மாற்று அரசியலை நோக்கி”இ என்பதனை முன்நிறுத்தி இத் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக கட்சி மக்கள் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் வகையில் தெளிவுடனும் தூரநோக்குடனும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் தொடரப்பட்டு வந்த பழைமைவாத ஆதிக்க அரசியலை நிராகரித்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு தேசியவாத சக்திகள் அணிதிரளும் வெகுஜன அரசியல் மார்க்கத்திற்கான அடிப்படையைத் தோற்றுவித்து முன்னெடுக்க முடியும். அதுவே மக்களுக்கான மாற்று அரசியல் பயணத்திற்குரிய ஆரம்பமாகவும் அமையமுடியும் என புதிய ஜனநாயக கட்சி நம்புகிறது. எனவே வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் இம் மாற்று அரசியலை நோக்கி அணிதிரள இத் தேர்தலை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என கட்சி அறைகூவல் விடுக்கின்றது.
சி. கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்