நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணனி சார்பில் போட்டியிட்டு பாராளுமனறத்திற்குத் தெரிவான வீ. இராதாகிருஷ்ணன் ம.ம.மு. தலைவர் சந்திரசேகரன மறைவையடுத்து அக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதுடன் அதன் அரசியல் துறை தலைவராகவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்திருப்பதுடன் அதற்காக ஒரு அமைச்சு மற்றும் மூன்று பிரதியமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து அமைச்சரவையில் இணைந்து கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியதாகவும், தொடர்ச்சியான பேச்சு நடத்தி அவற்றைத் தீர்த்துக் கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸதர் ஒருவர் தெரிவித்தாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஜனாதிபதி ஜகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பின் பின் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இந்த அமைச்சு – பிரதியமைச்சு பதவிகள் தங்களுக்கு கிடைக்கும் என இக்கட்சிகள் தெரிவித்துவருகின்றன.
இதே வேளை புதிய அமைச்சரவையில் அமைச்சுக்களும் இதற்கு மேலதிகமாக மாவட்ட அமைச்சு மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு என்பனவற்றை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.