ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பேரவையின் ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்;ன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தையும் நீதியையும் நிலைநாட்டும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை என்ற பெயரில் மக்கள் மத்தியில் போலி நம்பிக்கைகளை விதைக்கும் ஐ.நா மற்றும் ஏகபோக அரசுகளின் ஏமாற்று நாடகம் தொடர்கிறது. அதே வேளை இலங்கையை இராணுவமயமாக்கும் செயற்பாடுகள் அச்சம் தரும் வகையில் தொடர்கிறது. அண்மையில் வவுனியாவில் அமெரிக்க இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் 15 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக வவுனியாவில் நிலை கொண்டுள்ளதாகக் கூறும் அமெரிக்க
இராணுவத்த்தின் செயற்பாடுகள் வெளியில் தெரிவதில்லை. கொழும்பில் பிரபல பல்தேசிய வியாபாரி தம்மிக பெரேராவின் ஐந்து நட்சத்திர விடுதியான கிங்ஸ்பரி ஹொட்லிலிருந்தே ஹெலிகொப்டர்கள் ஊடாக அமெரிக்க இராணுவத்திற்கு உணவு எடுத்துச்செல்லப்படுகிறது. கடந்த 9 மாதங்களாக நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படைகளில் விமானப்படை மற்றும் கடற்படையினரும் அடங்குவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு இணையம் தெரிவிக்கிறது.
ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆணையாளருக்கோ தமிழ் ஐந்தாம் படை அரசியல் தலைமைகளுக்கோ இவை குறித்து அக்கறை கிடையாது. இளவரசர் அல் ஹுசைன் தனது முதலாவது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், நீதியை நிலைநாட்டும் விதத்திலும் தமிழர்கள் சிங்களற்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இலங்கை மேற்கொள்வது அவசியம் என்றும் உசைன் தமது அறிக்கையில் சுற்றிகாட்டியிருந்தார் அந்நாட்டில் சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா இன் முன்னை நாள் மனித உரிமை ஆணையாளரால் மூன்று பேரடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதனை இலங்கை அரசு நிராகரிப்பதாகக் கூறுகிறது.