Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புகைப்படத்தை வெளியிட வேண்டாம் : சர்வதேச ஊடகவியலாளருக்கு மகிந்த அரசு மரண அச்சுறுத்தல்

inioru.comஇலங்கை இராணுவத்தின் மூலமாக சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

ரொய்ட்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்பாளர் தினுக லியனவத்த, பிரான்சின்; (ஏ.எப்.பி) செய்திச் சேவையின் எரங்க ஜயவர்த்தன ஆகிய ஊடகவியலாளர்களே இராணுத்தினரால் மரண அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 15ம் திகதி இராணுவத் தளபதியின் தலைமையில் நடைபெற்ற கவசப்படையணியின் 55வது வருட நிறைவுக் கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த சம்பவமொன்றே அதற்கான ஏதுவாகியுள்ளது.
பிரஸ்தாப வைபவத்தின் இராணுவ அணிவகுப்பின் நடைபெற்ற போது இராணுவ வீரரொருவர் மயங்கி விழுந்துள்ளார். அதனை அவர்கள் இருவரும் படம்பிடித்துள்ளனர்.
அப்புகைப்படம் ஊடகங்களில் வெளியானது இராணுவத்தின் கீர்த்தியைப் பாதிக்கும் என்பதாக குறிப்பிட்டு இராணுவ ஊடகப் பிரிவின் மேஜர் மஹிந்த என்பவரே குறித்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுமளவுக்கு காரணியாக அமைந்த புகைப்படம் கீழே தரப்படுகின்றது.

Exit mobile version