ஜப்பானில் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை விபத்தின் பின்னதாக 2 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடல் மீன்களில் அணுக்கதிவிச்சு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமரிக்காவின் மாநிலமான கலிபோர்னியாவில் பிடிக்கப்பட்ட மீன்களில் கதிர்வீச்சுக் காணப்பட்டதைத் தொடர்ந்து 15 மீன்களின் மென் தோல் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அனைத்துமே இயற்கையான கதிர்வீச்சுத் தன்மையுள்ள பொருட்களைவிட மூன்று வீதம் அதிகமான கதிர்வீச்சைக் கொண்டதாகக் காணப்பட்டது. ஜப்பான் கடல் பகுதியிலிருக்கும் மீன்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் அமரிக்கக் கடற்கரைகளை நோக்கி நகரலாம் என தெரிவிக்கப்படுகிறது. கதிவீச்சின் செல்சியஸ் அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என ஜப்பான் மற்றும் அமரிக்க அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ள போதிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத கதிர்வீச்சுக்கள் என்று எதுவுமில்லை என விஞ்ஞானிகள் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அமரிக்காவிலிருந்து ஊடகங்கள் வழியாக வெளியாகும் இச் செய்தி கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் என்னவாகும் என்பதற்கு ஒரு முன் உதாரணம்.