Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புகழஞ்சலியோடு புதைக்கப்பட்ட போர்க்குற்றவாளி கற்றுத்தரும் பாடம்

sharonமுன்னாள் இஸ்ரேலிய இராணுவத் தளபதி மற்றும் பிரதம மந்திரியாகவிருந்த ஏரியல் ஷரோனின் மரணச்சடங்கு 13.01.2014 அன்று நடைபெற்றது. உலகில் அதிகமாக வெறுக்கப்படும் பயங்கர இனக்கொலையாளியின் இச்சடங்கில் உலகின் பயங்கரவாத அரசியல் குண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னை நாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேர் இவர்களுள் பிரதானமானவர். அமரிக்க துணை ஜனாதிபதி ஜோசேப் பிடேன் இன்னொருவர். 21 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் ஜெருசெலத்தில் நடந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கு கொண்டனர். இஸ்ரேலின் மிகப்பெரும் பண்ணை ஒன்றின் தனியுடமையாளரான ஷரோனின் உடல் அந்தப் பண்ணையிலேயே புதைக்கப்பட்டது.

மனிதப் படுகொலைகளைத் தானே தலைமை தாங்கி நடத்திவிட்டு அதனை ஒப்புக்கொள்ளும் ஷரொன் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூறியிருந்தும் செத்துப்போகும் வரை அவர் தண்டிக்கப்படவில்லை.

அமெரிக்க வெளி நாட்டிப் பிரத் நிதிகள் குழுவிற்குத் தலைமைவகித்த பிடென், ஷரோனுடைய இறப்பு “குடும்பத்தில் ஒரு மரணம் போல் இருந்தது” என்றார். அமெரிக்கத் துணை ஜனாதிபதி, ஷரோனுடைய செல்லப் பெயரான “புல்டோசர்” என்பதைத் தழுவி அவரை “தளர்வுறாத வீரர்” எனக்கூறி, அவரது “வாழ்க்கையின் போக்கை இஸ்ரேல் நாட்டுப் பயணத்தில் காணலாம்” என்றார்.

சூழலுக்கு ஏற்ப மக்களின் போராட்டத்தைத் திட்டமிடுவதன் ஊடாக மட்டுமே போர்க்குற்றவாளிகளையும் இனக்கொலையாளிகளையும் சமூகத்திலிருந்து அகற்ற முடியும் என்பதை ஷரோனின் மரணம் எமக்குக் கற்றுத்தருகிறது.

Exit mobile version