Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புகலிட எழுத்தாளர் ரமேஷ் சிவரூபன் அகால மரணமடைந்தார்!

 பிரான்சில் வாழ்ந்த புகலிடப் படைப்பாளி ரமேஷ் சிவரூபன் 02.06.2010 அன்று பாரீசில்  அகால மரணமானார். இம் மரணம் தொடாபாக தெரியவருவதாவது:

ரமேஷ் சிவரூபன் தனக்கு தெரிந்த நபர்களோடு உரையாடிக் கொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் வன்முறையாகி ரமேஷ் ரூபன் இவர்களால்  தாக்கப்பட்டதாகவும்,  பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பயனின்றி மரணமடைந்ததாகவும் தெரிவருகின்றது.

 புகலிட சுழலில் வன்முறைக் கலாச்சாரம் என்பது இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் வெகு ஆழமாக புரையோடிப்போய் உள்ளமைக்கு இவ் மரணம் சாட்சி பகர்கின்றது.

சாதாரண உரையாடல்களைக்கூட சகித்துக்கொள்ளமுடியாத வன்முறைச் சமூகமாக இலங்கைத் தமிழர்கள் உருமாற்றம் அடைந்துவருகின்றனர் என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய வேதனையான விடயமாகும். இது தொடர்பாக சமூக அக்கறையாளர்கள் கவனம் கொள்ளவேண்டியது அவசிய கடமையாகும்.

ரமேஷ் சிவரூபன் அவர்களின் மரணம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இலங்கை அரசு ஆதரவு இணையத்தளமான “தேனீ ” போன்றவை தம் வழமையான பாணியில் திரிவுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக இச் செய்தியை பிரசுரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

யாழ் ஏழாலை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட ரமேஷ் சிவரூபன் 18.08.1970ல் பிறந்தவர். இவர் ஏழாலை சைவமகாஜனா மல்லாகம் மகாவித்தியாலயம், மனிப்பாய் இந்துக்கல்லூரி, GRETA ROSSY GONESSE FRANCE IFIR Q (தொழில் பயிற்சிக் கல்லூரி) ஆகியவற்றில் கல்வி கற்றவர். ஈழத்தில் சண்டிலிப்பாய் கலைமகள் கல்வி நிலையம் ,கல்வியங்காடு  Star Pupil acadamy     ஆகிய தனியார் கல்வி நிறுவனங்களிலும், பிரான்ஸில் பாரீஸ் தமிழர் கல்வி நிலையத்திலும்ஆசிரியராக பணிசெய்தவர்.வான்மதிசஞ்சிகையின்   தொகுப்பாசிரியராகஇருந்தவர். கவிதை மூலம் படைப்புலகில் புகுந்து சிறுகதைகள் நாடகங்கள் என்பவற்றை எழுதியதோடு திரைப்படம் நாடகம் என்பவற்றையும் இயக்கியும் நடித்தும் என பலவகையிலும் புகலிட கலை இலக்கிய திரைப்படத் துறைக்கு தன் பங்கினை செலுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

 ரமேஷ் சிவரூபன் அவர்களின் மரணத்திற்கு ‘இனியொரு’   தம் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகின்றது.

Exit mobile version