Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு : சொந்த நாட்டு மக்கள் மீது இனக்கொலை?

GL-Peiris_inioruபுகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமது சொந்த நாட்டில் மக்களின் பாதுகாப்பையே உறுதிப்படுத்த முடியாத பீரிஸ்சும் அவரது இனப்படுகொலை அரசும் புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பில் மட்டும் அக்கறை கொள்வதன் காரணம் என்ன என்பதை அவர் மேலும் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளல்லாம்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆபத்து கிடையாது என்ற காரணத்தினாலேயே அவுஸ்திரேலியா அவர்களை நாடு கடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளினதும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவி வருகின்றமை நிரூபணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
பீரிசின் நோக்கம் இலங்கையில் மகிந்த குடும்ப ஆட்சியில் ஜனநாயகம் நிலவுகிறது என்று அவுஸ்திரேலிய மக்களுக்குக் கூறுவதே. இதனூடாக பொருளாதார நோக்கங்களுக்காகவே அகதிகள் வருகிறார்கள் என்று நிறவாதிகளைத் தூண்டிவிடுவதே ஆகும். இதனை அவரது பின்வரும் கூற்று நிரூபணமாக்கின்றது:
‘புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியா நோக்கி படையெடுக்கிறார்கள்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆபத்து கிடையாது என்ற காரணத்தினாலேயே அவுஸ்திரேலியா அவர்களை நாடு கடத்துகிறது.’ என்று அவுஸ்திரேலிய ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.
தவிர, தமிழர்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் நோக்கில் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோரை கப்பல்களில் ஏற்றி ஆபத்தான பயணத்திற்கு அனுப்புவதே ராஜபக்ச அரச முகவர்கள் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
Australian Human Rights Commission என்ற அமைப்பிற்கு பிரிசின் நோக்கம் குறித்தும் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அரச பயங்கரவாதம் குறித்தும், அகதிகளாக மக்களை வெளியேற்றிச் இனச்சுத்திகரிப்பைத் துரிதப்படுத்தும் ராஜபக்ச பாசிசம் குறித்தும் இனியொரு சார்பில் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டது.

Exit mobile version