Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புகலிடத்தில் “இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்” ( JDS) அமைப்பு உதயம்!

 

இலங்கையிலிருந்து வெளியேறி தற்போது மேற்கத்தேய நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கடந்த 18ம் திகதி ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஒன்றுகூடியுள்ளனர்.

இதன்போது ‘இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்”   (Journalists  for  democracy in sri  lanka )  என்ற அமைப்பு இதன்மூலம் நிறுவியுள்ளனர்.

ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸர்லாந்து, அவுஸ்ரேலியா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளில் வாழ்ந்துவரும் சுமார் 20 ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து அன்றைய நாள் முழுவதும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன், இந்த அமைப்பையும் நிறுவியுள்ளனர்.
 
 
  இலங்கையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆகியன மீது விடுக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் காரணமாக இலங்கையில் தற்போது குறைந்துசெல்லும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவது, இலங்கையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை தடைகளின்றி முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல், ஊடகவயிலாளர்கள் தொழில்ரீதியாக எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கையில் வெளியேற நேரிடும் ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவது ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாகும்.

Exit mobile version