Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்கத் தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவிற்கு பணிப்புரை

புகலிடக் கோரிக்கையாளர்கள் வரும் பட்சத்தில், அவர்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலர்னா மெக்-டியர்னான் தெரிவித்துள்ளார்.
Christmas Island இல் கடந்த வியாழக்கிழமை இரவு புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கூடிய படகொன்று அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் தமது படகில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள்.

இந்தப் படகு தென்னிந்தியாவில் இருந்து வந்ததெனவும், அதில் 37 சிறுவர்கள் அடங்கலாக 152 பேர் இருப்பதாகவும் தெரிவதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இரு படகுகளில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை சனிக்கிழமை இரவு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பதாக மெக் டியர்னன் தெரிவித்தார்.

எந்தவிதமான படகுகளும் வந்ததாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று குடிவரவு அமைச்சர் கூறி இருந்த போதும், நேற்று இரண்டு படகுகளை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் உடனடியாக நவ்ரு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Exit mobile version