Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பீரிசிற்கு ஹில்லாறி கிளிங்டன் அழைப்பு : அமரிகாவின் இனக்கொலை முகம்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன், அமைச்சர்ஜீ.எல்.பீரிஸை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் மற்றும் நல்லிணக்கப்பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்த விஜயம் இடம்பெறும் எனத்தெரிவிக்கப்படுகிறது.
ஹிலரி கிளின்ரனின் அழைப்பு தொடர்பான கடிதம், ஏற்கனவே அமைச்சர்பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி நல்லிணக்கநடவடிக்கைகளை ஏற்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக கிளின்ரனின் கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு புறத்தில் இலங்கையுடன் உறவைப் பேணிக்கொண்டு போராட்ட சக்திகளை அழிக்கும் நோக்கில் ஐ.நாவில் இலங்க்கைக்கு எதிரான கண்துடைப்புத் தீர்மானத்திற்கு அமரிக்கா ஆதரவளிக்க, புலி சார்பு அரசியல் வியாபாரிகள் அமரிக்கா மனித உரிமையில் காவல் தெய்வம் எனப் போற்ற மற்றொரு சிக்கலான சூழல் உருவாக வழிவகுகப்பட்டுள்ளது.

Exit mobile version