மே 27ம் திகதி, BBC ஹௌலா பற்றி ஓர் அறிக்கையை, “குழந்தைகளின் சடலங்கள் ஹௌலாவில் புதைக்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன” எனக் காட்டும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது.
உண்மையில் இது “மிகச் சிறந்தது” என்பதைத் தவிர வேறு எப்படி வேண்டுமானாலும் கூறலாம் என்னும் எதிர்த்தரப்புப் பிரச்சாரத்திற்கு உதாரணம்தான் எனக்கூறலாம். இப்புகைப்படம், டஜன் கணக்கான அடையாளம் தெரியாத சடலங்களைக் காட்டுவது உண்மையில் மார்ச் 27, 2003 ல் ஈராக்கில், மார்க்கோ டி லௌராவில் எடுக்கப்பட்டது.
இதனையே சிரிய அரசபடைகளால் கழுத்து அறுக்கப்பட்டு மிருகத்த்னமாகக் கொல்லப்பட்ட குழந்தைகள் என பி.பி.சி செய்தி வெளியிட்டது. பல சுதந்திர ஊடகவியலாலர்கள் புகைப்படம் தவறானது என நிறுவியதோடு, நடைபெற்ற கொலைகளை மேற்கொண்டது சிரிய அரசிற்கு எதிரான மேற்கு நாடுகளின் நிதியில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்களே எனவும் நிறுவினர்.
திட்டமிட்ட பிரச்சார நடவடிக்கையாக மேற்கொண்ட இந்தச் செய்தி குறித்த உண்மையை அவருடைய வலைத்தளத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளார். பி.பி.சி இது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.