தயா மாஸ்டர் எனப்படும் முன்னை நாள் புலிகளின் முக்கிய உறுப்பினர் வடக்கு தேர்தலில் போட்டியிடுகிறார் என உறுதியாகியுள்ளது.
தமிழினியின் கட்டளைக்கு உட்படுத்தப்பட்ட, அவரால் பயிற்சியளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் போராளிகள் சிறைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தயாமாஸ்டரால் வழி நடத்தப்பட்டவர்களில் பலர் எங்கே என்று தெரியாத நிலை உள்ளது.
பாசிச ராஜபக்ச அரச அதிகாரத்திற்கு எதிராகவும் இந்திய இலங்கை கூட்டுச் சதிக்கு எதிராகவும் அழிப்பவர்களோடு சமரசம் செய்து முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நான்கு வருடங்கள் கடந்து போயின.
இதன் வழியாக தமிழ்ப் பேசும் மக்கள் என்றும் இல்லாத ஒடுக்கு முறையையும் நில ஆக்கிரமிப்பு உட்பட இனச்சுத்திகரிப்பிற்கும் உள்ளாக்கபடுகின்றனர்.
உலகின் நட்பு சக்திகளோடு இணைந்து மக்களின் ஜனநாயக முற்போக்கு போராட்டங்களுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.