பிழைப்புவாதத் தலைமைகளால் ஒழுங்கு செய்யப்படாத மாறுபட்ட கிளாஸ்கோ ஆர்ப்பாட்டம்:காணொளி
இனியொரு...
இனக்கொலையாளியும் பேரினவாதியுமான மகிந்த ராஜபக்ச கிளாஸ்கோவில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மற்றொரு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. பலரின் கவனத்தை ஈர்த்த இந்த ஆர்ப்பாட்டம் இசை வடிவத்தில் செய்தியை மக்கள் மத்தியில் கூறியது. பிரித்தானிய அரசும் அதிகார வர்க்கமும் இனக்கொலையாளி ராஜபக்சவுடன் இணைந்து செயற்படும் அருவருக்கத்தக்க செய்தியை கலை நயத்தோடு பிரித்தானிய மக்களுக்குச் சொன்ன இந்த ஆர்ப்பாட்டத்தை டிஸ்கோ விளையாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கிளாஸ்கோ விளையாட்டரங்கின் முன்னால் எந்ததத் தகவலையும் மக்களுக்குச் சொல்லாமல் ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ என்று மட்டும் முழக்கமிட்ட ஆர்ப்பாட்டத்தோடு ஒப்பு நோக்கும் போது இந்த ஆர்பாட்டம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பலஸ்தீனியர்கள் எங்கள் தலைவன் மொகமட் அப்பாஸ் என்றோ, இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நேபாளிகள் எங்கள் தலைவன் பிரசண்டா என்றோ இதுவரை முழங்கியதில்லை. தமிழர்களுக்காக மட்டும் அவர்களைக் கட்டுப்படுத்தி தமது வியாபார எல்லைக்குள் வைத்திருப்பதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் எந்தப் பலனையும் இதுவரை கொடுத்ததில்லை. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் போது லண்டனில் ஒருலடசம் தமிழ் மக்கள் தெருக்களில் போராடிய போதும் பிரித்தானியா முழுவதும் போராடும் மக்கள் கூட்டத்தைத் தலைமைகள் தமது திருட்டு நோக்கங்களுக்காக அன்னியப்படுத்தின. இன்று வரை இந்தச் சோகம் தொடர்கிறது.
கிளாஸ்கோவில் மாறுபட்ட வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி கீழே: