அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளுடன் இனிவரும் காலத்தில் இணைந்து செயற்படாது என அறிவித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 2004 ம் ஆண்டு அது செயற்பட்ட அடிப்படையில் இருந்து விலகிச்சென்றதன் காரணமாகவே இந்த முடிவை தாம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தாம் விரைவில் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் காணப்படும் பிரச்சினைகள், அந்த கூட்டணி கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் உண்மைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தப்போவதாகவும் அதற்காக இன்று அல்லது நாளை விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைக்கும் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த கிஷோர், தான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் வன்னியில் போட்டியிடவுள்ளதாக அடித்துக்கூறியுள்ளார்.
தன்னைப்போலவே, கூட்டமைப்பின் இன்னொரு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரட்ணமும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இன்னமும் உத்தியோகபூர்வ தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.
இப்பிழவின் பின்னணியில் இந்தியத் தலையீடு அமைந்திருக்கலாம் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டன.
இதுதான் எஙகள் அரசியல், புலி புல்லும் தின்னுமா
இதில ஏனையா இல்லாம போன புலிகள கூப்பிடுறீங்க!! உங்கமாதிரி ஆக்களாலதானே அவங்க அழிஞ்சாங்க/அழிக்கபட்டார்கள். இது தமிழனுக்கே உரிய குணம். இப்பிடி இருந்த நாய்களைதான் 30 வருசமா ஒன்றாக வச்சிருந்து ஒரு நாட்டை கட்டி எழுப்புவமெண்டா அட்குக்கும் வச்சிங்களேடா ஆப்பு!!!!
இன்னும் போன புலிக்கு வக்காலத்து வாழக
கிஷோர் கனகரட்னம் யாருங்கோ
எட்டப்பனும் காக்கை வன்னியனும் தான். ஏன் இவர்கள் உங்கள் உறவில்லையா?
இன்று கடைசியாகக் கிடைக்கும் தேர்தல் சம்பந்தான செய்த்களின்படி
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (TNA) எதிராக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் புதிய கட்சி ஒன்றைத் துவக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் புதிய கட்சி தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பருத்தித்துறையில் நடைபெற்ற இளைஞர் குழுவுடனான சந்திப்பில் அவர் இதை மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
* அடுத்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளத்துக்கு அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் இருவர் போட்டியிடவுள்ளனர் என்றும், ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டியலில் பிரபா கணேசன் போட்டியிடவுள்ளார் என்றும் தெரிவித்ஹுளார்.
.அடுத்த வேட்பாளர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
* இதற்கிடையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP ) இன்று அறிவித்துள்ளது.
டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா இதனைக் கூறியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் (EPDP ) தமது கட்சி நேரடிப் போட்டியில் களமிறங்கிறது எனவும் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனு பத்திரத்தை கையளிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முதற் தடவையாக தமது கட்சி கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் போட்டியிடவிருப்பதாகவும் ஆசாத் மௌலானா சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகு சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* மேலும் இன்று இரவு 8.30 மணியளவில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் தீர்க்கமான முடிவுகள் பலவற்றை எடுக்கக்கூடிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இரவூப் ஹகீம் உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர் என அறியப்படுகிறது.
இதில் பல காரசாரமான விவாதங்கள் இடம்பெறலாம் என்றும்,எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடுகள்,தேசியப்பட்டியல் உறுப்புரிமை ஆகியன குறித்தும் முக்கியமாக ஆராயப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரங்கல் தெரிவித்தன.
இதேவேளை,முஸ்லிம் காங்கிரஸின் ஆசன ஒதுக்கீடு விவகாரம் இன்று கலந்தாலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
வேதனைகள வெளீயே சொல்ல முடியவில்லை.சமபந்தர் அய்யாவின் வயதை,அனுபவத்தை,ஆற்றலை, மரியாதை செய்யாமல் முன்னைநாள் சந்தர்ப்பவாத பத்திரிகை ஆசிரியர் ஆ….சிரியர் தன் சந்தர்ப்பவாதக் குணத்தை விமர்சனம் என்ற போர்வையில் காட்டியதைத்தான் தாங்க முடியவில்லை.கனடாவில் இருக்கிறோம் என்பதால் எல்லோரும் யேசுக் கிறீஸ்துவின் சீடர்கள் ஆக முடியாது. கேள்வி கேதிறோம் என்ற போர்வையில் கேலி செய்வது,தூற்றூவது,குற்றம் சாட்டுவது நம் விருந்தின்ரை,நம் வீட்டுக்கு வருபவரை அவமதிப்பது போலாகும்.நமது விருந்துக்கு வருபவர் நாம் சொல்வதைக் கேட் க வேண்டுமென்றூ வலியுறூத்துவதா கனடா நாட்டுப் பண்பாடு?
அனுபவமும் ஆற்றலுமுள்ள சம்பந்தன் உணர்சிவசப்படாமல் நிதானமாக கேட்ட கேள்விகளுக்கு அல்லது கருத்துகளுக்கு தனது மறுமொழியை அல்லது கருத்தை முன்வைத்து முடிவுவரை இருந்து விடைபெற்றுப் போயிருந்தால் சம்பந்தர் தமிழருக்கு நல்லதுதான் செய்யப் போகிறாரென பலர் நம்பியிருப்பார்கள். அடிப்படைக் கொள்கையில் இருந்து விலகாமல் தமிழர் ஆடு, மாடு வளர்க்க உதவி பெற காலம் போய்விட்டது. இப்படிதான் முன்பும் சொல்லிச் சொல்லி தமிழரையும் ஏமாற்றி தமிழ் இளைஞரையும் உசுப்பி விட்டவை. தன் முயற்சியில் சாட்டும் தளராத விக்கிரமாதித்தன்….
மருந்து தேவைப்படுகிற நேரத்திலை விருந்தைப்ப்ற்றிக்கதைக்கிறாங்கள்.
இனம் செத்துக்கொண்டிருக்குது. சம்பந்தருக்கு விருந்து வைத்து கொண்டாடொணுமாக்கும்.நோகாமாநொங்கெடுக்கணும்மக்கும்.
சம்பந்தர் மூத்தவர்தான் அவர் சொன்ன பதிலிலேயே இருக்குது. சிஙளப்பத்திரிக்கையாளன் கேள்வி கேட்டால் பம்மிக்கொண்டு பவ்வையமாக பதில் சொல்லுவார்.
மூத்த அரசியல்வாதிக்கு தெரிய வேணும் இது சொந்த ப்ரச்சினை இல்லை பொது ப்ரச்சினை ஒரு விமர்சனத்துக்கு பதில் சொல்லாமல் ஓடினால் கோபப்பட்டால் அது மூத்த அரசியல்வாதிக்கு அழகல்ல என்று.
சமுகம் முதிரிச்சியில்லாத மந்தர்களை கொண்டிருக்கும் அது உண்மை.ஆவர்Kஅள் முட்டள்தனமாக கதைக்கவும் செய்யக்கூடும்.
முதிர்ந்த அரசியல்வாதிநிதானம் தவற்மாட்டான்.
அழைப்பைத்துண்டித்த சம்பந்தர் சந்தர்ப்பத்தை தவ்ற்விட்டுவிட்டாரோ.
அல்லது இப்படி..
கனடாவில் இருப்பதால் கதைக்கக்கூடியதாக் இருக்கிரறது. கதைத்தவர் தவறான முறையில் கதைத்தார்.
சம்பந்தர் அகைச்சாட்டாக வைத்து புலம்பெயர்ந்தவர்களேநீங்கள் இதில் தலையிட முடியாதுநாஙள் களத்தில்நிற்பவர்கள்
என்று உறவைத்துண்டித்து விட்டாரோ
தமிழ்த் தேசியத் தலைவர் ஒருவரை நாகரீகமற்று,ஆள் வைத்து அடிக்கிற மாதிரியான காட்டுமிராண்டித்தனம் கனேடியப் பிழைப்புவாதிகளால் அரங்கேற்றப்பட்டது கேவலமானதும்,மிலேச்சத்தனமானதும் ஆகும்.தங்கள் பிழைப்புகளுக்காக புலிகளை மட்டுமல்ல,தமிழ் மக்களையே அழித்ததில் இந்த வானொலி ஆய்வுக் கோஷ்டிக்கு மிகுந்த பங்குண்டு. கனடிய அரசிடம் ஒட்டுண்ணிகளாக வாழ்க்கை நடத்துகிற இந்தப் பச்சோந்திக் கூட்டம், இனத்தின் பெயரால் விபச்சாரம் செய்கிறார்கள்.தங்கள் பிழைப்புக்காக இலங்கையில் ஏவல் நாய்களை தேடிக் கொண்டிருகிறார்கள்.ஒரு கிழக்கின் தலைவர் தமிழருக்கு இருக்கக் கூடாதென நினைக்கிற பாரம்பரிய சகதிக்குள் இருக்கின்ற பன்றிகளால், தமிழ் ஈழத்திலிருந்து புலிகளின் தலைமையை ஏன் இவ்வாறன கருத்து திணிப்புகளில் ஈடுபடுத்தவில்லை என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
திருகோணமலையிலே சம்பந்தனைக் காணுவதே அரிது.
பிறகென்னையா கிழக்கின் தலைவர்?
தங்கத்துரையிடம் தோற்றதையே தாங்க முடியாத அற்ப மனிதர்.
திருகோணமலை இரண்டு தரம் நிராகரித்த தலைவர்(?) இவர்.
சிங்கள, முஸ்லிம் எம்.பி. வரக்கூடும் என்று வேறு ஆளில்லாமல் இவரை அனுப்பி வைக்கிறர்கள்.
இதில் வியக்கவோ வருந்தவோ என்ன உண்டு?
1983க்குப் பிறகு தமிழர் வியாபாரக் கூட்டணியினர் இந்தியாவின் சேவகர்களகி விட்டனர்.
இயக்கங்களிற் பலவும் 1987க்குள் இந்தியாவின் கூலிப்படைகளக்கப்பட்டு விட்டன.
1989இல் இந்தியாவின் வேடம் கலைந்த பின்பு அவர்கள் எல்லாரதும் நம்பகத்தன்மை கெட்டு விட்டது.
விடுதலைப் புலிகளைப் பகைத்து வாழ முடியாது என்ற அச்சம் போக, அவர்களை அண்டினாலேயே பாராளுமன்ற வாழ்வை மீட்கலாம் என்பதலேயே த.தே.கூ. உருவாக்கப்பட்டது.
அவர்களின் இந்தத் தெரிவு இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல. இந்தியா வேண்டுவது பூரண அடிமைத்தனம். அதைத் தரவல்ல உதிரிகளை மதித்துநடத்திய இந்தியா, த.தே.கூ.வைப் பிச்சைக்காரர்களிலும் கேவலமாக நடத்தியது. காரணம் புலிகளுடனான கூட்டு.
இந்தியாவை மகிழ்விக்கச் சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூடச் செல்வதையே தவிர்க்கும் அளவுக்குச் சம்பந்தன் விசுவாசம் காட்டிய போதும் அவர் அவமதிக்கப் பட்டதை நாம் அறிவோம்.
இப்போது இலங்கையில் இந்திய முகவர் அமைப்புக்கள் பல தளங்களிலும் இயங்குகின்றன.
த.தே.கூ.வை இந்தியா ஏற்பதையே இந்தியாவில் குடும்பங்களை வசதியாக வைத்திருக்கும் த.தே.கூ. தலைவர்கள் விரும்புவதில் வியப்பென்ன?
அந்த அங்கீகாரத்துக்கான விலையே இந்தக் காய் வெட்டுதல்.
த.தே.கூ., தமிழர் வியாபாரக் கூட்டணியை விடக் கேவலமன ஒரு அயோக்கியக் கும்பல்.
அவர்கள் விலக்க முன்னமே விலகியது த.கா.வின் சமயோசிதம்.
இன அழிப்பு அமோகமாக நடைபெற்ற போதும் சரி,அதன் பின்னரும் கூட த.தே.கூ வினர் எத்தனை தடவைகள் இந்திய அரச தலைவர்களை சந்திப்பதற்கு தவமாய் தவமிருந்தார்களென்பது உலகுக்கே தெரியும்!எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்கள்?இருந்தாலும்,மீசையில்(அது தான் பலருக்கு இல்லையோ?)மண் படாதது போலவே நடந்து கொண்டார்கள்!இதில் வேறு கொலைஞரும்!!!வடிவேல் தான் நினைப்பில் வருகிறார்!இவங்க எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருக்காங்களே!இவங்க ரொம்ப நல்லவங்க!!மகிந்தர் காலில் விழலாம்,கஜேந்திரன் காலில் விழக் கூடாதோ?கவுரவம்???????
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குமாரின் வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக பாராளுமன்றம் அனுப்பப் பட்டவர். சமாதான காலத்தில் இவர் யாழ் வரும் போது அவர் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் “மினரல் வாட்டரும்” பின்னாலேயே வரும். மக்களின் கஷ்டம் தெரியாத இவரெல்லாம் தேர்தலில் நின்று என்ன செய்யப் போகிறார்?
இப்போதைக்கு உள்ள ஒரே ஒரு நம்பிக்கை சம்பந்தர் தான். கனடாவில் பேட்டி எடுத்து, குறை கூறி, சேறு பூசி ஒன்றும் நடக்காது. வாக்களிக்கப் போவது தாயகத்திலுள்ள நாம் தான். பொறுத்திருந்து பாருங்கள்.
1983 இலிருந்து எல்லா இயக்கங்களும் இந்தியாவின் எடுபிடிகளாகத்தான் இருந்தன.அதை மீறி வந்த நிலையில் புலிகள் தாக்குப் பிடித்தாலும்,இந்திய மேற்பார்வையில் பின்பு பூண்டோடு அழிக்கப்பட்டார்கள். இன்று இந்தியாவை விட்டு எதுவும் செய்ய முடியாது என்பது முடிந்த முடிவாயிற்று.சீனாவுடன் சிங்களம் செய்கின்ற சரசத்திற்கு,தமிழரைப் பலிக்கடாவாக்கி இந்தியா சிங்களத்துடன் சமரசம் செய்ய விளைகிறது.தமிழர் ஒரு கட்டுக்கோப்பான ஒற்றுமையை காட்டுவதன் மூலமே சமநிலைமை பேணி குறைந்தபட்ச உரிமைகளேனும் தற்காலிகமாக வென்றெடுக்கலாம்.இதுவரை இருந்த தமிழ்த் தலைமைகளுடன் ஒப்பீடு செய்யும் போது சம்பந்தர் ஒன்றும் சலித்துப் போனவர் அல்ல.கிழக்கை மீட்க,யாழ்வாதம் கலைக்க சம்பந்தர் தலைமை இன்றைய தேவை. குறை பிடிச்சு,கொண்டோடிகளாகத் திரிகின்ற தமிழர்கள்,தங்கள் பிழைப்புக்கு ஏவல்பேய்களைத் தேடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.அழுதழுதும் பிள்ளை அவளே பெற்று விடட்டும்.தூர இருந்து நியாயம் பிளக்கிறது ஒரு சுகமான வேலை.
அரசு அதிகாரத்தில் நேர்மை,உண்மை,நியாயம் பறைகிறதெண்டால் திருக்குறள் படிச்சு திண்ணையில பிரண்டு சிவனே எண்டு இருக்கவேண்டியதுதான். முதலில சிந்திக்க தெரியோணும்,பிறகு கொடுக்கு வரிஞ்சு கட்டலாம்.
வணக்கம் எதிர்வு
இரா. சம்பந்தன் கனடிய வானொலியில் பாடிய இராகம் அவரது துரோகத்தனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
இங்கு ஒருவரும் குறைபிடிக்கவில்லை என்பதைத் தாங்கள் உணரவேண்டும். தமிழர் தலைமை வடக்கிலிருந்து வந்தாலென்ன கிழக்கிலிருந்து வந்தாலென்ன தலைமை தாங்குபவர்கள் நமது கொள்கையிலிருந்து விலகாமல் செயற்படுவதே நல்லது.
என்னைப் பொறுத்தவரை த.தே.கூ தமது கொள்கையிலிருந்து விலகினால் தமிழர் தரப்பு நமது தேசியக்கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒரு புதுத்தலைமையைத் தெரிவுசெய்வதே நல்லது.
இந்தியாவிற்குத் தாளம் போடும் தமிழினத் துரோகிகள் எங்களுக்குத் தேவையில்லை
ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் உயிர் வாழ முடியும்.அவர்களால் புரட்சிகரமான கதையமைப்புகளுடன் நடிக்க முடியாது.எதார்த்தம் என்ற சொற்களுடேதான் இயங்க முடியும்.இந்தியாவின் எடுபிடிகளாக இயங்குவது தவிர்க்க முடியாதது.பிரபாகரனையும்,சம்பந்தனையும் புரட்சியின் பிதாமகர்களாகப் பார்க்கக் கூடாது.இவர்கள் தமிழ் சமூக ஆழுமையின் வெளிப்பாடுகள்.இவர்களது தோல்வியும்,பிறழ்வும் வெளியிலிருந்து வந்ததல்ல.உள்ளிருந்தே அரிக்கும் வியாதி.இந்த நோய்க்கு மருந்து ஒற்றுமை என்பதே.
துப்பாக்கியின் முன்னே இருந்த ஒற்றுமையை இப்போது ஏதோ காரணங்களைக் காட்டி இழக்க முடியாத நேரம் இது. ஆயுதமும்,பணமும்தான் ஒரு இனத்தின் ஒற்றுமையா? அறிவு என்ற பலத்தை வைத்து ஓரணியில் இயங்கும் தேவை,பொதுப் புரிந்துணர்வுடன் நடை போடும் பார்வை இன்றைய உடனடித் தேவை. Bulletஐ இழந்த பின் ballotஐ ஒரே முனைப்பில் பாவிக்கத் தெரிய வேண்டும்.அத்திவாரம் பலப்படுத்தாமல் கூரையை மாற்று என்கிறது ஆரோக்கியமான சிந்தனையல்ல.அவர்கள் எப்படி போகிறார்கள் என்று விடுப்பு பார்கிறதை விட்டு விட்டு,இந்த வெளியாட்கள் தங்களால் செய்யக் கூடியதை செய்யாமல் நியாயம் பிளக்கிறதும்,வட்டுகோட்டை,நாடு கடந்தது என்று எதிரும் புதிருமா, இலங்கை அரசுக்கு ஏற்றபடி நடக்கிறதுதான் எனக்கு துரோகத்தனமாகப் படுகிறது.
பிற்குறிப்பு:இதை எழுதியதிற்காக,என்னை வாள் கொண்டு யாரும் தேடவேண்டாம்.
தமிழர்களுடைய வாக்குக்காகத்தானே சம்பந்தர் களமிற்ங்குகிறார்? ஏன் இந்த தேர்தலை மீண்டும் ஒரு வட்டுக்கோட்டை தீர்மானமாக காட்டக்கூடாது. இம்முறையும் தேசியம் சுயனிர்ணய உரிமையை முன்ணிறுத்தி பேசக்கூடாது?
இலஙையின் சட்ட அமைவுக்கு முரணானதுதான். சிறை செல்லட்டுமே உலகம் தமிழர்கள் தமது உரிமையைதான் ஜனனாயக ரீதியில் னாடு கடக்காமல் னாட்டுக்குள்ளே கருத்தை தெரிவிக்க ஒரு சந்தர்ப்பமல்லவா இது.
சட்டப்படி பிரிவினை கோருபவர்கள்நடளுமன்றம் செல்லமுடியாதுதான். தமிழர்களின் வாக்குப்ப்லத்துடன் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் அனைவரும் ஒரே குரலில் ப்ரிவுதான் ஒரே வழி என்றால் அரசு அவர்களை கைது செய்ய வேண்டிவரும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர் அவர்கள் விடுதலக்காக போராடலாமே.
ஒரு பெரிய ஜனனாயக போராட்டமாக இருக்கும்.
பாராளுமன்ற அரசியல் எந்தநன்மையையும் விளைவிக்கவில்லை.
இந்த தேர்தல் ஒரு சந்தர்ப்பம். 50 வருடங்களாக னாம் வெற்றுக்கொஷமாக்கினால் ,னான் மேலே குறிப்பிட்டது போல எங்கள் முன்னால் ஒரு வழியிருக்க ஆட்சியமைக்கும் கூட்டணியை திருப்திப்படுத்தும் கோஷங்களை முன்வைப்பது
வ்ரலாறுத்தவறாக முடியும்
எந்தக்கட்சிய் தமிழ்த்தெசியத்தையும் சுயநிர்ணய உரிமையையும் முன் வைத்து தேர்தலில்நின்றூ மக்களை ஊக்குவித்து வாக்குகளை பெற்று அதன் மூலம் தமிழர்களின் பிரிவினையை ஒரே குரலில் முன்வைத்தால் இன்றைய அரசு தேச விரோத அடிப்படையில் அவர்களை கைது செய்யும்.
உல்கத்தமிழர்கள் மிக உக்கிரமாக இறுதி யுத்தகாலம் போல போராட வேண்டும்.
அது ஒரு தீர்வைநோக்கிய பயணமாக இருக்கும்
ஒரு பொன்செகா வுக்காக அவர்கள் போராடுகிறார்கள் அதைப்பொலத்தான்.
யாராவது சம்பந்தருக்கு சொல்லுங்களென். அரசு பெரும்பான்மை பெறுவது உறுதி.பாராளுமன்ற உறுப்புரிமையால் எதுவும் புதித்தாக கிழிக்கப்படபொவதில்லை.உ
அவர்களை எப்படி போராடு என்று சொல்லிக் கொடுத்துத்தான் அழிவிற்கு சாட்சியாய் தெருக்களில் நின்றோம்.இனியும் போராடுவது எப்படியென்று சொல்ல என்ன அருகதை எம் போன்ற வெளியாருக்கு இருக்கிறது? செக்கு மாடாக சுற்றி வருவதில்லை நல்ல சிந்தனைகள்.தவறாகிப் போனவைகளை தவறாது தொடர்வது வளர்ச்சியல்ல.
அருகதையில்லாவிட்டால் அருகதையுள்ள்வர்களை பேசவிட்டு ஒதுங்கிப்போங்கள்
இது கருத்துக்களம் கருத்தை சொல்லவேண்டியது கடமை.
சம்பந்தரும் வெளியார்தான். அவர் குடும்பம் இந்தியாவில்.கோத்தபாய அமெரிக்காவின் குடிமகன்.
ஐலஙை அரசியல் .
செக்குமாட்டுச்சிந்தனை ஒரு அரசியல்வாதிக்கு இருக்கும் அவன் இந்த தேர்தலில் வெல்வதும் கதிரையை பிடிப்பதும் கூட்டணி அமைப்பதுந்தான்
இந்த செக்குமாட்டு அரசியலை 1948 இலிருந்து செய்தாகிவிட்டது,
புதிதாக எதனைச்செய்யமுடியும் இலஙையின் இறைமைக்குள்?.
அதுக்கு சம்பந்தர் எதுக்கு தமிழர்கள் யுஎன்பி அல்லது எஸ்.எல்.எப்பியிலோ சேரவேண்டியதுதானே?
அவர்களை இப்படிப்போரடு எனறு சொல்ல உரிமையில்லையென்றால் ஏன் இதைப்பற்றிய எழுத்துக்களில் ஏன் எதிர்வு அவர்களே கலந்து கொள்ளுகிறீர்கள்.
உரிமயிருக்கிறது என்றுநினைப்பவர்களின் உரிமையில் ஏன் க்றுக்கீடு செய்கிறீர்கள்.
கருத்துச்சொல்ல உரிமயும் இருக்கிறது அருகதையும் இருக்கிறது.சம்பந்தருக்கு இருக்கிற உரிமையளவே சம்பந்தருக்கு இருக்கிற அருகதை அளவுக்கு தாய்னாட்டைநேசிக்கிற எவருக்கும் உரிமையிருக்கிறது.
புரட்சியென்பது ஆயுதம் தூக்குவதால் வருவது மாத்திரமல்ல.முன்னர் தெரிவு செய்யப்பட்டவர்கள் புலிகளின் ஆதரவாலும் தேர்தல் முறைகேடால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற ப்ரச்சாரம் இருந்தது.இப்போது மீண்டுமொரு சந்த்ர்ப்பம்.வாக்குகள் மூலம் தமிழர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைக்கட்டும்.தெரிந்தெடுக்கப்ப்டுபவர்கள் ஒரு போராட்டத்துக்கு தயாராக இருக்கட்டும்.அவர்களது குரல் அரசமைப்புக்கு எதிராக இருக்கும். அன்றைய காலம் போல அல்ல இன்று தமிழர்கள் உலகமெல்லாம் பரந்து வாழ்ஹ்கிறார்கள். எமது போராட்டம் உலகெங்கினும் அறியப்பட்டதாயிருக்கிறது.தமிழரின் ஜனனாயக பிரதினிதிகள் கைது செய்யப்பட்டர்கள் என்பது போதும்.உலகம் எங்கும் போராட்டங்களை நிகழ்ஹ்த்துவதன் மூலமும் மாறிவரும் உலக ஒழுஙுகும் , பயஙரவாதசாயமில்லாத ஜனனாயக தன்மையும் எங்களின் பலமாக அமையும்.புலிஎதிர்ப்பு புலி ஆதரவு என்ற கருத்து வெறுபாடுகள் இங்கு வலுவிழக்கும். இது தமிழினத்துக்கானது.
தெரிவு செய்யப்படுபவர்கள் உறுதியானவர்களாக விலை போகாதவர்களாக எதையும் தாங்குபவர்களாக இருக்கவெண்டும்.
நடக்குமா? இங்கு கருத்து தெரிவிப்பவர்கள் எல்லோருக்கும் ஒரு பொது ஆதங்கந்தான் அது எங்களுக்கு ஏன் இந்த நிலை என்பது தான். அந்த விதத்தில் நாம் எல்லோரும் பொதுக்கருத்துக் கொண்டிருக்கிறோம்.அங்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைப்பது பாராளுமன்ற உறுப்புரிமையை அதற்கு பயன்படுத்தலாம் என்று சிலர் சிந்திப்பது தெரிகிறது.தேர்தல் நடந்தாலும் வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சிதான் தொடரப்போகிறது. இராணுவம் அனுமத்திதால் தான் எதுவும்.மகிந்த பெரும்பான்மை பெற்றால் தமிழ் பா.உ களை சந்திக்கவே மாட்டான்.இந்தியாவுக்கு வால் பிடித்தாலும் இந்தியாவோடு பேரம் பேசும் சக்தி இலங்கைக்கு நிறையவே இருக்கிறது. சம்பந்தர் பேசிய முடிவை ஒரு நொடியில் பாசிலால் மாற்ற முடியும். பிறகு மன்மோகன்சிங்கை சந்திக்க சம்பந்தர் வருடக்கணக்காக காத்திருக்க வேண்டிவரும். இதெல்லாம் பார்த்துச்சலித்துப்போனவை.
பாராளுமன்றக்கதிரையை யோசிக்கமல் இந்ததேர்தலை ஒரு கொள்கைப்ப்ரகடனமாக்கி அதற்காக போராடுவதுதான் சிறந்த்ததும் நியாயமானதும் ஆகும். சாத்தியமானதும் கூட
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் 06ம் திருத்தச்சட்டத்தை பகிரங்கம்மாக மீறவேண்டும். அவர்கள் கைது செய்யப்படுவார்கள் அதுவும் இன்றைய அரசு அதை கட்டாயம் செய்யும்.அது போராட்டமாகும். சட்ட ரீதியாக , மக்கள் எழுச்சியாக ராஜதந்திர ரீதியாக தமிழர்கள் போராடவேண்டும்
தமிழர் வோட்டுப் போட்டு யாருக்கு நன்மை? ஒரு சிங்கள வெறியன் போனால் மறு சிங்கள பெரும் வெறியன் வருவான்.
எதிர்வு அவர்கள் உதிர்த்த வார்த்தைகளே சத்திய உண்மை.இந்த துரோகி வியாதியில் இருந்து விடுபடுவதற்கு நாளாகலாம் என்பதோ கசப்பான உண்மை.
உங்கள் அதிரல் எனக்குப் புரிகிறது.கடந்த முப்பது ஆண்டு காலமாய் அவர்கள் அழிவில் உண்டி பெருத்தீர்கள்.உண்டியல் குலுக்கினீர்கள்.உண்டியலப் பாதுகாக்க அம்மக்களையும்,தலைமையும் அழித்தீர்கள்.இன்று உங்கள் யாவாரம் படுத்து விடக் கூடாது என்பதற்காக அவர்களை மீண்டும் பலி கொடுக்க தயாராகி விட்டீர்கள்.உங்களை நம்பி சூடு பட்டவர்கள் தங்கள் காலில் நிற்க முனைகிறார்கள்.
சம்பந்தர் நாவன்னாகானவுக்கும் வானகோவன்னாக்கும் மண் போட்டதிற்காய் துள்ளுகிறீர்கள்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர் அவர்கள் விடுதலைக்காக போராடலாமோ!
ஜனனாயக போராட்டமோ! ஒட்டியிருந்து நீங்கள் இந்த முப்பதாண்டு காலம் என்ன மசிரைப் புடுங்கினீங்க! குண்டி கூழுக்கு அழுகுது,கொண்டை பூவுக்கழுகுது.
எங்கள் ஊரில் ஒரு வெறிக்குட்டி இருந்தது. நல்ல புல்லில் வரும்போது ஆராவது மறைந்திருந்து கல்லை யெறிந்தால் அவர் எப்போதும் ஒரே குடும்பத்தை இழுத்து தூசணமாகத்திட்டுவார்.யார் கல்லெறிந்தாலும் அந்தக்குடும்பத்துக்குதான் அருச்சனை விழும்.நாய்க்கு எங்கு கல்லுப்பட்டாலும் அது காலைத்தூக்கிக்கொண்டுதான் ஓடும் என்றும் சொல்லுவார்கள்.
கருத்தை விளங்கி அதற்கு பதிலளிக்கமல் ஒரு கருத்திலேயே மனத்தை செலுத்தி எத்னையும் அதனூடாகவே மாத்திரம் பார்க்கிற தன்மை புலம்பெயர்ந்தவர்களில் பலருக்கு இறுக்கிறது.புலி எதிர் புலி ஆதரவு, நாட்டைவிட்டு ஓடிவரும்போது என்ன கருத்தோடு வந்தார்களோ அந்தக் கருத்திலேயே வாழ்வது ,வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர்கள் உடனடியாகவே எதிர் உணரிச்சிக்கு தாவிவிடுவார்கள்.இங்கு சம்ம்பந்தரை துக்கிப்பிடிப்பதும் கஜேந்திரனத்தூக்கிப்பிடிபதுவும் அல்ல நோக்கம்.வானொலியில் முட்டாள்த்னமாக கதைத்தவர் சொன்னது அது.சம்பந்தர்தன் அதுக்கு எதிர்வினை புரிந்தார்.
அடுத்து என்ன செய்வது கூட்டமைப்பு குழம்புதே அடுத்து என்ன செய்வது என்பதுதானானைத்தையும் கொட்டி போராடினோம்.எம்மில் அனேகர் இழந்தவர்கள்தான்.இன்னும் இழப்புக்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச்ய்வது போலத்தான் இருக்கும்.அதனால் ஒரு பதட்டம் சம்பந்தர் கவுட்டுப்போட்டுவரோ என்று சிலருக்கு.சிலருக்கு இது வெறும் அரசியல். சிலறுக்கு இது உணர்வு. சிலர் நிதானமாக சிந்திக்கா கூடும். சிலருக்கு இது வியாப்பாரம்
நீ மயிரப்புடுங்கினாயா என்பதும் குண்டி கூழ் கேட்பதாகவும் வலையை வடலியாக நினைத்து வார்த்தையால் மலங்கழிப்பது இஙுபொருத்தமற்றது எனென்றால் கருத்து தெரிவிப்பவரின் த்கைமை அவருக்குதான் தெரியும். அவர் கட்டாயமாக வெறும் அரசியல் கத்தைக்கவேண்டும் என்றில்லை. மேலும் அவர் புலம்பெயராதவராகவோ அல்லது புடுங்குவதற்கு மயைரில்லதவராகவொ இருக்கலாம்.
கருத்து என்ன்கிருந்து வருகிறது என்று தெரியாமல் … கல்லு எறிவது
எமக்கு கருத்து சொல்ல்வது எப்படி என்று சொல்ல முனையும் எதிர்வு அவர்களே உங்கள் கருத்தை இப்ப்படி சொல்லலாம்.“ நான் ஒரு புலம்பெயர்ந்தவன்.எனுடைய அபிப்பிராயம் 30 வருடஙளாய் நான் ஒரு மயிரும் புடுங்கவில்லை.எனக்கு இதில் அப்பிப்பிராயம் சொல்லத்குதியில்ல்லை”
மாறாக உனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று கேட்டதனால்தான் பதில் எழுத தோன்றியது.
எல்லா போராட்டஙளிலும் புலம்பெயர்ந்த்வர்களே பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள்.அதுவும் எந்த நாடும் பின்புலத்தில் இல்லாத ஒரு போராட்டத்துக்கு புலம்பெயர்ந்தவர்கள் தான் ஆதாரமே.இது இன்றைய உலககிராமத்தின் அடிப்படை. புலம்பெயர்ந்த்வர்களுக்குள் அரசியல் இருக்கத்தான் செய்யும்.உங்களுக்கிடையில் உள்ள அரசியலால் ஒதுங்கியிரு என்று சொல்வதும் கருணானிதி தன் அரசியலுக்காக் ஒதுன்கிருப்பதும் ஓன்றுதான்.
புலம்பெயர் உள்குத்து அரசியலை பார்த்து விட்டு நீங்கள் விரக்தியில் கதைப்ப்துபோலத்தான் தோன்றுகிறது.என்ன செய்வதூலகம் செயற்படுபவர்களுக்கானது. கருத்துக்களில் சில அவர்கள் காதுகாளில் விழலாம்.
எம்.ஜி.ஆர் இறந்தபின்பும் அவர் பெயரில் அரசியல் நடாத்துவதுபோல் புலிகளின் அழிவிற்குபின்னும்
புலியின் பெயரில் குளிர்காயத்தான்பலர் நினைக்கின்றார்கள்.சம்பந்தரை அன்று வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தார்கள்,இந்த வானொலி காலம் காலமாக மக்களை குளப்பி வேடிக்கை பார்பதில் முதன்மையானது.அதுவும் அந்த ஆய்வாளர் எப்போ கனடா வந்தாரோ அன்று தொட்டது எம்மவருக்கு சனியன்.ஒரு குடம் பாலுக்கு ஒருதுளிவிசம் போல் கனாடாவை நாறடித்ததில் இவர் பங்கு முதன்மையானது.இவர் குடுக்கும் விருதுகளால் பலர் அவருடன் அள்ளப்பட்டு விட்டர்கள்.
இவவளவிர்கும் இவரின் கடந்தகால வாழ்க்கையையும் இவர்கள் அறிவார்கள் இருந்தும் ஆசை யாரை விட்டது.விருதை வாங்வந்து இங்கால சொல்லுவார்கள் அவனை பற்றி எங்களுக்கு தெரியும் தானே கூப்பிட்டான் தவிர்க்கமுடியாமல் போய்விட்டதென்று.இந்த நாய்களுக்கு நாடு ஒரு கேடு.
கனடாக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.
சம்பந்தனின் 33 வருட அரசியல் திருவிளையாடல்களைப் பற்றி அவருடைய ஊரில் அறிவார்கள்.
தமிழர் எல்லாருமே அறிவார்கள்.
சம்பந்தன் இந்திய முகவர் என்பதில் ஐயம் வேன்டாம்.
சுயநலத்துக்காக கொள்கையை மாற்றுவதில் அவருக்கு ஈடாக வெகு சிலரே உள்ளனர்.
வேண்டுமானால் முழு 33 வருட வண்டவாளங்களையும் அவிழ்த்து விடலாம்.
இங்கு இடம் பற்றாது.
நன்றீ ரதன்.உண்மையில் உந்த துலைவானாலதான் வாழ வேண்டிய வயதில அவன்ர மகனும் இல்லாமற் போன்வன் ஆனால் இன்னும் தன்ர எடுவையை விடாமால் விழா எடுத்து விருது குடுத்துக் கொண்டிருக்கிறான்.அந்த லோகனாதனால் செல்வம் எடுக்கிற வித்தையில் இவன் ஒர் வித்தன்.எல்லாருக்கும் நாமம் போடும் இவனுக்கும் நாமம் போடுவார்கள் பொறூத்திருங்கள்.
அதிரன்: ஏன் இந்த தேர்தலை மீண்டும் ஒரு வட்டுக்கோட்டை தீர்மானமாக காட்டக்கூடாது?
எதிர்வு:செக்கு மாடாக சுற்றி வருவதில்லை நல்ல சிந்தனைகள்.தவறாகிப் போனவைகளை தவறாது தொடர்வது வளர்ச்சியல்ல.
அதிரன்: இலங்கையின் சட்ட அமைவுக்கு முரணானதுதான். சிறை செல்லட்டுமே.
எதிர்வு:இன்று உங்கள் யாவாரம் படுத்து விடக் கூடாது என்பதற்காக அவர்களை மீண்டும் பலி கொடுக்க தயாராகி விட்டீர்கள்.
அதிரன்:தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் 06ம் திருத்தச்சட்டத்தை பகிரங்கமாக மீறவேண்டும். அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
எதிர்வு:அவர்களை எப்படி போராடு என்று சொல்லிக் கொடுத்துத்தான் அழிவிற்கு சாட்சியாய் தெருக்களில் நின்றோம்.இனியும் போராடுவது எப்படியென்று சொல்ல என்ன அருகதை எம் போன்ற வெளியாருக்கு இருக்கிறது?
அதிரன்:அருகதையில்லாவிட்டால் அருகதையுள்ளவர்களை பேசவிட்டு ஒதுங்கிப்போங்கள்.
எதிர்வு:ஒட்டியிருந்து நீங்கள் இந்த முப்பதாண்டு காலம் என்ன மசிரைப் புடுங்கினீங்க!குண்டி கூழுக்கு அழுகுது,கொண்டை பூவுக்கழுகுது.
அதிரன்:நீ மயிரப்புடுங்கினாயா என்பதும் குண்டி கூழ் கேட்பதாகவும் வலையை வடலியாக நினைத்து வார்த்தையால் மலங்கழிப்பது இங்கு பொருத்தமற்றது.
எதிர்வு:தொப்பி அளவாகப் பொருந்தினால் என்னிடம் பொருமத் தேவையில்லை.திருந்திக் கொள்ளுங்கள்.பழமொழியின் விளக்கம் மலமொழியாக மாறுமோ?
அதிரன்:உலகத்தமிழர்கள் மிக உக்கிரமாக இறுதி யுத்தகாலம் போல போராட வேண்டும்.
எதிர்வு :ஆயுத முள்ளிவாய்க்கால் முடித்து, அரசியல் முள்ளிவாய்க்கால் முடிக்க உளவுத்தமிழர்கள் ‘மிக உக்கிரமாக இறுதி யுத்தகாலம் போல போராட வேண்டும்.’
மிகச் சரியான சிந்தனை.
கனடா வானொலிக்காரனுக்காக அவனை எதிர்க்கோனும் என்பதற்காகவா தமிழீழத்தை கைவிடச்சொல்ல்கிறீர்கள்.அடப்பாவமே புலிகளால் தமிழீழக்கொள்கையை கைவிட்டார்கள் சிலர். சனம் செத்ததையும் சாவேல்லையெண்டு சொன்னாங்கள் இப்ப வானொலிக்காரன் சம்பந்தர் புதுப்பாதை காட்டப்போறாரோ.பிரிவினை செக்குமாடுசிந்தனையாம் அடக்கட்வுளே.துரையப்பாவை துரோகி என்றார்கள். அந்தக்கொலையோடு தொடங்கிய ஆயுதப்போராட்டம் இப்ப துரையப்பா செய்தது போன்ற அரசியல் செய்வதுதான் சரி என்பதோடு வந்து நிற்கிறது.கருணா துரையப்பா போல அதே கட்சியில் இருக்கிறார்.இன்னும் பலர் இணைகிறார்கள். அதே போல மறுதரப்பில் மிச்சமாக இருக்கிற சம்பந்தர் அதே போலவே பேசுகிறார்.கூட்டணிக்கு பதிலாக கூட்டமைப்பு.
இந்த செக்கு வருடக்கண்க்காக சுற்றுகிற செக்கு .
வரலாறு என்பது மீண்டும் மீண்டும் நிகழ்வது. பாராளுமன்ற அர்சியல் செக்கு பல வருடங்களாக சுற்றிக்கொண்டு இருக்கிறது.அது செக்குத்தான்.புதிதாக சேர்ந்தது ஆயுத்ப்போரும் அதன் விளைவாக வ்ந்த புலம்பெயர்ந்த தமிழ்க்கூட்டமும்.இனி அதை வைத்துத்தான் எதையாவது சாதிக்க முடியும்.22 பாரளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதிர்வின் மொழ்இல் சொன்னால் ஒரு மயிரும் புடுன்க இயலாது.
வளர்ச்சியென்பது வரலாற்றின் பின்னோக்கிப் பயணிப்பதல்ல.
தந்தை செல்வா காலத்துக்கு பாராளுமன்ற அரசியலை கட்டி எழுப்பவேண்டும் என்கிறார் எதிர்வு. தந்தை செல்வா தமிழரை கடவுள் தான் காப்பற்றவேண்டும் என்று களைத்துப்போய் சொன்னார்.இப்பொழுது மீண்டும் தொடன்குகிறார்கள்.Ballot ஐ பாவித்து மயிர் புடுங்கலாம் என்று எதிர்வு அடிக்காத குறையாக சொல்லுகிறார்.புலம்பெயர்ந்தவர்களை பொத்திக்கொண்டிருங்கோ .உங்கட பிரச்சினை வேற அவங்கட பிரச்சினை வேற என்று அழகா சொல்லுறார்(தமிழில் எத்தனையோ பழமொழியிருக்க தமிழில் பல்வேறு பலமொழிகள் பல அசிங்கமானதில் இருந்து நளினமானது வரை இருக்கிறது. தமிழ் இடக்கரடக்கல் போன்ற சபை நாகரிகங்களோடு வளம் படைத்ததாக இருக்கிறது.)ஆனால் அது எல்லாருக்கும் பொதுவானதல்ல.யோசித்துப்பார்த்ததில் கருத்துச்சொல்பவர்கள் தமக்கு இயலுமான முறல்ல அனுமதிக்கவேண்டும்.கருத்து வெளிப்பட்டால் சரி. மலங்கழிப்பதன்மூலமும் கருத்தை வெளிப்படுத்தலாம்.வெளிப்படுத்தட்டும் அதை ஊக்குவிக்கவேண்டும்
புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பாட்டிலை ,இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கடபாட்டிலை, அரசியல்வாதிகள் இலங்கையின் இறைமக்குள் இப்படி எல்லாரும் செக்குமாடுகளாயில்லாமல் கட்டாக்காலி மாடுகாளாய் தமிழ்ச்சமூகம் திரியட்டும்.
இலட்சியத்தால் ஒன்றுபடுதலும் சில அடிப்படை விடயஙளில் சமரசம் செய்யமுடியாது என்பதும் உலகின் உயிர்வாழ்வதற்கான விதி. நீர் உணவு காற்று என்பது உடலின் சமரசம் செய்யப்படமுடியாத அடிப்படைகள். ஒரு பறவைக்கு அதன்ச்றகுகள். தமிழினம் இலங்கையில் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறது.சில விடயங்களில் சமரசம் செய்தால் அது அழிந்துபோய்விடும்
ஆனால் கடந்த காலத்தை ஆராய்ந்தால் 05 வருடங்களுக்கு ஒருமுறை போக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. 85. 90,95,2000,05,10 .ஓவ்வொரு முறையும் பொது எதிர்பார்ப்புக்கு எதிரான மாற்றந்தான் நிகழும்.இது ஓய்வுக்காலம் புலம்பெயர்தமிழர்கள் உள்னிகழும் அரசியலைசாட்டி ஒதுங்கியிருக்க முடியாது.எதிர்வு கூறமுடியாத ஒரு மாற்றம் ஒன்றுதான் காத்திருக்கிறது என்று மட்டும் தான் எதிர்வு கூற முடியும்
எதிர்வும் அதிர்வுமாய் தொடரலாம் அர்த்தமிலை, என் கருத்துக்கூறும் காலம் முடிந்துவிட்டது. எதிர்வினுள்ளெயே எதிர்விருக்கிறது.
அதிரன் போன்ற அறீவாளீகளால்தான் தமிழர் நிமிர்ந்து நிற்க முடிகிறது.இலங்கை மண்னை விட்டு இடம் பெயர்ந்து நமது மண்டை மண்ணாங்கட்டி ஆனதுதான் மிச்சம்.ஆனால் அதிரன் சிந்தனை நம்மை அதிர வைக்கிறது.செப்புத்தட்டுக்கலை தட்டில் வைத்து அலைகிற செல்வமானவர்கள் கையில் அகப்பட்டால் கனடா வரக் காசும் விருதும் என்றூ அமர்க்களம் ஆகலாம்.ஒரு முரை அந்த கனடா ரேடியோவுக்கும் போனால் புட்டும்,சம்பலும் செய்வது எப்படி என்ற அரிய தகவலும் கிடைக்கலாம்.
முதலில் இருக்கின்ற பாரளுமன்றத் தலைமைகளைக் குழப்பி தமிழர் ஒற்றுமையை சிதைக்கக் கூடாது.
அவர்களால் இன்று செய்யக் கூடியது காயங்களை சீழ்ப்படுத்தாது தவிர்ப்பதே.
அத்தோடு இருக்கின்ற மக்களின் கடமை அவர்களை விரும்பியோ விரும்பாமலோ ‘சுயநிர்ணய உரிமை’ என்ற எம்மினத்தின் வாழ்வாதாரச் சொற்குறிப்பை உச்சரிக்க வைப்பதே.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் பேசும் மக்கள் தாம் தனித்துவமானவர்கள் என்றே அறைந்த்திருக்கிறார்கள்.
இம்முறையும் அதன் தனித்துவத்தை ஒரு முனைப்புடன் வாக்குப்பலத்தின் மூலம் நிலை நிறுத்துவார்கள்.
இ
தில் வெளிநாட்டு தமிழர்கள், சர்வதேச ராஜதந்திர உறவுகளை வளர்ப்பது,இனப்படுகொலையாளரை தண்டிப்பது, இலங்கை அரசிற்கெதிரான பொருளாதாரத் தடைகளை பிரயோகிப்பது,சர்வதேச அனுசரணையுடன் வாக்கெடுப்பொன்றை தமிழிழத்தில் நடத்துவது போன்ற முரண்பாடுகளற்ற செயற்திட்டங்களில் ஈடுபடல் வேண்டும்.மீண்டும் கெரில்லா அமைப்பின் உயிர்ப்பு மட்டுமே, இந்த உள்நாட்டு,வெளிநாட்டு சக்திகளை ஒருங்கிணைக்கும் பாலமாக அமையும். பாராளுமன்ற தலைமை,வெளி நாட்டுத் தமிழர்,கெரில்லா அமைப்பின் சமபல அதிகார சபை ஒன்றே நாளைய வழி. அதுவே தனியரசாக வழியமைக்கும்.முதலில் கோஷ்டி கானங்களை நிறுத்துவோம்.முரண்பட்டு சிதறாமல்,எல்லா
வற்றையும் இழந்து நிற்கிற மக்களை முன்னிறுத்தி ஒரு காலடியைத்தன்னும் முன் வைப்போம்.
இனியுங்கள் கற்களை என்னில் குறி பார்த்து வீசுங்கள்.
“இனியுங்கள் கற்களை என்னில் குறி பார்த்து வீசுங்கள்.”
ஏன்? அடி வாங்குவதிலும் அப்படி ஒரு ஆனந்தமா?
“தமிழர் ஒற்றுமை” என்ற பேரில் 50 வருடங்கட்கும் மேலாகப் பேய்க்காட்டப்பட்ட சனம் இனியும் அதற்கு எடுபடாது.
முதலில் சனத்தின் தேவைகளில் இருந்து தொடங்கலாமா?
இந்தத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் (தமிழரசு, காங்கிரஸ் முதலாக புலிகள் வரை) தாங்கள் நினைத்ததை மக்கள் மீது திணித்தவர்கள் தான்.
அதே பாணியில் தான் புது ஆலோசனை மாதிரிக் காட்டப்படுகிற சில ஆலோசனைகளும் தொடர்கின்றன.
முதலில், இது வரை நடந்தவற்றுக்குப் பொறுப்பானவர்கள் தங்களது கடந்த கால அரசியலுக்கான நேர்மையான விளக்கங்களுடன் தொடங்குவார்களா?
எல்லாவற்றையும் மூடிக்கட்டிவிட்டு மறுபடி “ஒற்றுமையாக என்னை அனுப்பு அல்லது என் கூட்டத்தை அனுப்பு. போனதையும் மீட்டு இன்னமும் வாங்கித்தருவேன்” என்று புலுடா விட்டால் எப்படி?