Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிள்ளையான் மகிந்தவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முன்னை நாள் முதலமைச்சரான பிள்ளையான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மகிந் ராஜபக்ச போன்றே பல்வேறு குற்றச்செயல்களோடு பிள்ளையான் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தேர்தல் வன்முறைகளிலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள அதேவேளை 52 முஸ்லிம்களை படுகொலை செய்த முன்னாள் முதல்வர் பிள்ளையானை தனது ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.
அப்படியானால் அவர் பயங்கரவாதம் சம்மந்தமான ஆலோசகரா? என ஐக்கிய தேசியக் கட்சியின எம்.பி.யான தயாசிறி ஜயசேகர இன்று சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வின் போது இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகார சபை திருத்தச் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version