தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமது பெயரை மாற்றம் செய்யவுள்ளது.
இது பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறும் என்று கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் என்ற பதம் தமிழீழ விடுதலைப்புலிகளை குறித்து நிற்பதால், கட்சியின் பெயரை மாற்றியமைப்பதற்கு2009 ஆம் ஆண்டு இறுதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும்போது குறித்த தீர்மானம் செயல்வடிவம் பெறவுள்ளதாக அசாத் மௌலானா தெரிவித்தார்.
எனினும் புதிய பெயர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கருணா குழு என்று முன்னர் அழைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, 2007 ஆம் ஆண்டு சிவநேரதுரை சந்திரகாந்தன் தலைமையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்று பெயரிடப்பட்டு 2008 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டது.
அதில் பெரும்பான்மை வெற்றியைப்பெற்று கிழக்கு மாகாணசபை ஆட்சியை கைப்பற்றியது.